Election bannerElection banner
Published:Updated:

பூங்கோதை ஆலடி அருணா: சட்டசபை தேர்தல்... ஒரு பார்வை! #TNelections2021

பூங்கோதை எம்.எல்.ஏ
பூங்கோதை எம்.எல்.ஏ

பூங்கோதைக்கு எதிராக தொகுதி திமுகவினரிடையே காணப்பட்ட கணிசமான எதிர்ப்பு காரணமாக, அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகம் நிலவியபோதிலும், அவருக்கே மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியது திமுக மேலிடம்.

ஆலங்குளம் தொகுதியில் ஆளும் கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றால், அமைச்சராகும் ராசி உள்ள தொகுதி என்ற பேச்சு இந்த தொகுதிக்கு உண்டு. நெல்லை மக்களவை தொகுதியின் கீழ் வரும் ஆலங்குளம் தொகுதி, ஆலங்குளம் வட்டம் மற்றும் அம்பை, தென்காசி வட்டங்களின் ஒரு பகுதியைக் கொண்டதாகும். மறைந்த முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஆலடி அருணா போன்றவர்கள் இங்கு போட்டியிட்டு வென்றவர்கள்தான். கடந்த 1952 முதல் 2016 வரை நடைபெற்ற 15 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக, காங்கிரஸ் தலா 4 முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காந்தி காமராஜ் காங்கிரஸ், சுயேச்சை வேட்பாளர்கள் தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளனர். 2006 தேர்தலில் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவும், 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.ஜி.ராஜேந்திரனும், 2016 தேர்தலில்திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவும் வெற்றி பெற்றனர்.

பூங்கோதை எம்.எல்.ஏ
பூங்கோதை எம்.எல்.ஏ

தொகுதியில் நாடார் சமுதாய வாக்குகள் 60 சதவீதத்திற்கும் மேலாக உள்ளதால், நாடார் சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளர்களையே அனைத்து அரசியல் கட்சிகளும் நிறுத்துகின்றன. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பூங்கோதை ஆலடி அருணா 88,891 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட கார்த்திகேயன் 84,137 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இந்த முறை பூங்கோதைக்கு எதிராக தொகுதி திமுகவினரிடையே காணப்பட்ட கணிசமான எதிர்ப்பு காரணமாக, அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகம் நிலவியபோதிலும், அவருக்கே மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியது திமுக மேலிடம். \

இந்தத் தேர்தலில் பூங்கோதை ஆலடி அருணாவை எதிர்த்து, அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் நிறுத்தப்பட்டதால், போட்டி கடுமையாகவே காணப்பட்டது. மேலும் அமமுக சார்பில் எஸ்.ராஜேந்திராநாதன், மக்கள் நீதி மய்யம் சார்பில் எஸ்.செல்வக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மு.சங்கீதா உள்ளிட்டவர்களும் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் நின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு