Published:Updated:

``நாட்டைச் சீர்குலைப்பதுதான் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் நோக்கம்!" - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ரவி

`பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான அமைப்பு' என தமிழக ஆளுநர் ரவி கருத்து தெரிவித்திருக்கிறார்.

``நாட்டைச் சீர்குலைப்பதுதான் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் நோக்கம்!" - ஆளுநர் ஆர்.என்.ரவி

`பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான அமைப்பு' என தமிழக ஆளுநர் ரவி கருத்து தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ஆளுநர் ரவி

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டுவிழா ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ``பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான அமைப்பு. மனித உரிமை அமைப்பு, மாணவர் இயக்கங்கள்போல பல முகமூடிகளை அணிந்துகொண்டு இந்தியாவில் செயல்பட்டுவருகின்றனர். இந்த அமைப்பு பயங்கரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாகச் செயல்படுகிறது. நாட்டைச் சீர்குலைப்பதுதான் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நோக்கம். ஆப்கானிஸ்தான்,இராக், சிரியா ஆகிய நாடுகளில் சண்டையிட ஆட்களை அனுப்புகிறது.

ஆளுநர்  ரவி
ஆளுநர் ரவி

அரசியல் லாபத்துக்காக வன்முறையைத் தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே. அரசியல் லாபத்துக்காக வன்முறையைத் தூண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மாதிரியான அமைப்புகளைச் சில கட்சிகள் ஆதரித்துவருகின்றன. பயங்கரவாத்தில் ஈடுபட்டால் அதற்கான பதிலைப் பெறுவார்கள்'' என்றார்.

இந்த நிலையில், ஆளுநர் உள்நோக்கத்தோடு பேசியிருப்பதாக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு குற்றம்சாட்டியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism