Published:Updated:

``மக்கள்தொகைப் பிரச்னையை சாதி, மதத்துடன் தொடர்புபடுத்துவது சரியல்ல!" - முன்னாள் மத்திய அமைச்சர்

முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி

``இங்கு சிலர், அல்லாஹ்-வின் கருணையைக் காரணமாகக்கொண்டு வரம்பற்ற பிரச்சனைகளை உருவாக்க விரும்புகிறார்கள்." - முக்தார் அப்பாஸ் நக்வி

``மக்கள்தொகைப் பிரச்னையை சாதி, மதத்துடன் தொடர்புபடுத்துவது சரியல்ல!" - முன்னாள் மத்திய அமைச்சர்

``இங்கு சிலர், அல்லாஹ்-வின் கருணையைக் காரணமாகக்கொண்டு வரம்பற்ற பிரச்சனைகளை உருவாக்க விரும்புகிறார்கள்." - முக்தார் அப்பாஸ் நக்வி

Published:Updated:
முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி

ஐக்கிய நாடுகள் சபை கடந்த திங்களன்று வெளியிட்ட மக்கள்தொகை பற்றிய அறிக்கையில், `2023-ல் உலக அளவில் அதிக மக்கள்தொகைகொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு வரும்’ என கணிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாள்களாகவே, இந்தியாவில் மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

மக்கள்தொகை
மக்கள்தொகை

அந்த வகையில் சமாஜ்வாடி கட்சியின் எம்.பி ஷபிகுர் ரஹ்மான் பார்க், ``குழந்தை பிறப்பதெல்லாம் வல்ல இறைவனின் முடிவு" என்று கருத்து கூறியிருந்தார். ஷபிகுர் ரஹ்மானின் இத்தகைய கருத்துக்கு, முன்னாள் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நேற்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய நக்வி, ``மக்கள்தொகை அதிகரிப்பு பிரச்னையை, எந்தவொரு நாடும் புறக்கணிக்கவோ அல்லது தாங்கிக்கொள்ளவோ முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னாள் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி
முன்னாள் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

இருப்பினும் பெரும்பாலான நாடுகள் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் நேர்மறையான முடிவுகளையே தந்திருக்கின்றன. ஆனால் இங்கு சிலர், அல்லாஹ்-வின் கருணையைக் காரணமாகக்கொண்டு வரம்பற்ற பிரச்னைகளை உருவாக்க விரும்புகிறார்கள். மேலும், மக்கள்தொகை பெருக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தின் பிரச்னையல்ல. அது மொத்த நாட்டையுமே பாதிக்கும் பிரச்னை. இதைச் சாதி, மதத்துடன் தொடர்புபடுத்துவது சரியானதல்ல" எனக் கூறினார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் பதவியை, தன்னுடைய எம்.பி பதவிக்கலாம் முடிவடைவதற்கு முன்பாகவே ராஜினாமா செய்த நக்வி, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.