Published:Updated:

``எங்க நஷ்டத்தால, அரசாங்கத்துக்கு எந்த கவலையும் இல்ல..!" - விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் வேதனை

விசைத்தறி வேலைநிறுத்தம்

விருதுநகர் மாவட்டத்தில் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 20-வது நாளாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

``எங்க நஷ்டத்தால, அரசாங்கத்துக்கு எந்த கவலையும் இல்ல..!" - விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் வேதனை

விருதுநகர் மாவட்டத்தில் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 20-வது நாளாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

Published:Updated:
விசைத்தறி வேலைநிறுத்தம்

மத்திய அரசு சமீபத்தில் நூல், பஞ்சு விலையை பல மடங்கு உயர்த்தியது. இதன் காரணமாக தறி நூல் மற்றும் நூற்பாலைகளுக்கு தேவையான காட்டன் பஞ்சு விலை 100 சதவிகதத்துக்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நூல், பஞ்சு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 20-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விசைத்தறி துணி உற்பத்தியாளர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக மாவட்டத்தில் சேலை உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதைச் சார்ந்த குடும்பத்தினரின் வாழ்வாதாரமும் நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது.

இந்த நிலையில், விசைத்தறி துணி உற்பத்தியாளர்களின் இந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பாண்டியராஜிடம் பேசினோம். ``விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், தளவாய்புரம், விருதுநகர் அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்கள்ல விசைத்தறி மூலமாக சேலை நெய்துட்டு வர்றோம்.

இதில் ராஜபாளையம், தளவாய்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் பகுதிகளில் காட்டன் சேலைகளும், அருப்புக்கோட்டையில் காட்டன், பாலிஸ்டர் சேலைகளும் நெய்யப்படுது. சமீபத்தில் மத்திய அரசு நூல், பருத்தி விலையை பன்மடங்கு உயர்த்தியதால நெசவுத் தொழில் செய்யமுடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கோம். சேலை நெய்றதுக்கு பயன்படுத்தப்படும் 40-ம் நம்பர் நூல்கட்டு ஒன்றின் விலை ரூ.900-லிருந்து 1,860 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைப்போல 60-ம் நம்பர் நூல்கட்டு விலை 1,540 ரூபாயிலிருந்து 2,640 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஒரு நூல்கட்டின் விலை நூறு சதவிகதத்துக்கும் மேல் உயர்ந்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
விசைத்தறி வேலைநிறுத்தம்
விசைத்தறி வேலைநிறுத்தம்

இது எங்களின் வாழ்வாதாரத்தில் விழுந்த மிகப்பெரிய அடி. நூல் விலை உயர்வு காரணமாக உற்பத்தி செய்யப்படும் சேலைகளை கூடுதல் விலைக்கு விற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கு. ஆனா, சேலைகளுக்கு அடக்க விலையை உயர்த்தினா வாங்குறதுக்கு யாரும் தயாரா இல்ல. பழைய விலையின்படி 40-ம் நம்பர் நூல் சேலை ஒன்னு 280 ரூபாய்க்கு விற்போம். இப்போ நூல் விலை உயர்வால ஒரு சேலையோட அடக்கவிலையை 120 ரூவா உயர்த்தணும். ரூ.390-க்கு சேலைய குடுத்தா ஏஜெண்டுகளும், ஜவுளி கொள்முதல்காரங்களும் வாங்கமாட்டிகாங்க.

60-ம் நம்பர் நூல் சேலையை 330-லிருந்து 360 ரூபாய்க்கு கொடுப்போம். இப்போ 460 ரூபாய்க்கு குடுத்தாதான் கட்டுபடியாகுது. ஆனால் நாங்க குடுக்குற விலைக்கு வியாபாரிகள் வாங்கமாட்டிகாங்க. மிஞ்சிப்போனா ஒரு சேலைக்கு 40 ரூபாய்க்கு மேல கூடுதல் விலைவச்சி விக்க முடிக்கல. நூல்விலை உயர்வுக்குப் பிறகு ஒரு சேலையை உற்பத்தி செஞ்சி விக்கிறதுக்கு உற்பத்தியாளர்களுக்கு 60 ரூபாய் கைப்பிடித்தம் வருது.

அதனால, நஷ்டப்பட முடியாதுனு விசைத்தறி வேலைநிறுத்தம் அறிவிச்சிருக்கோம். நூலை வாங்கி சேலையா நெய்து கடைக்கு அனுப்பி விற்பனை செய்வதற்கு 3 மாசம் ஆகுது. எங்களுக்கு கூலி 3 மாசத்துக்குப் பிறகுதான் கிடைக்குது. தொழில் முடக்கம், உற்பத்திக்கான காசு வசூல் ஆகல. புதுசா முதலீடு செய்யுறதுக்கும் கையில காசு இல்ல. நூற்பாலைகளுக்கு 40 ஆயிரத்துக்கு கிடைச்ச பஞ்சு, இப்போ 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாகிடுச்சு. அதனால அங்கேயும் தொழில் நடக்கல. தளவாய்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்ப் பகுதியில பகுதிநேரம் மட்டும் விசைத்தறி வேலை நடக்குது. ராஜபாளையத்துல மட்டும் முழுநேரம் வேலைநிறுத்தம் பண்ணிருக்கோம். இதனால சுமார் 3 கோடி ரூபாய் வரைக்கும் சேலை உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கு. நூல் விலை நிதானத்துக்கு வர்ற வரைக்கும் இந்த வேலை நிறுத்தம் தொடரும். பல லட்சக்கணக்குல நஷ்டம் ஏற்படும். இந்த நஷ்டத்துனால அரசாங்கத்துக்கு எந்த கவலையும் இல்லை, எங்களுக்குத்தான் பாதிப்பு. இத தெரிஞ்சும், வேலைநிறுத்தம் செய்றோம்னா அரசாங்கம் எங்க நிலையை புரிஞ்சிக்கணும்னு கேட்டுக்குறோம்" என்றார் கவலையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism