Published:Updated:

`காய் நகர்த்தும் 5 பேர்; கொந்தளித்த ஆ.ராசா!'- தி.மு.க-வில் பொருளாளர் பதவி யாருக்கு?

ஸ்டாலின்

தி.மு.க-வில் பொருளாளர் பதவியை ஆ.ராசாவுக்கு கொடுக்கப்போகிறார்கள் என்று சமூகவலைதளங்களில் தகவல்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

`காய் நகர்த்தும் 5 பேர்; கொந்தளித்த ஆ.ராசா!'- தி.மு.க-வில் பொருளாளர் பதவி யாருக்கு?

தி.மு.க-வில் பொருளாளர் பதவியை ஆ.ராசாவுக்கு கொடுக்கப்போகிறார்கள் என்று சமூகவலைதளங்களில் தகவல்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

Published:Updated:
ஸ்டாலின்

தி.மு.க-வில் அடுத்த பொதுச் செயலாளர் துரைமுருகன்தான் என ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், அடுத்து பொருளாளர் யார் என்பது குறித்த விவாதங்கள் தி.மு.க-வில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. எப்படியாவது பதவியைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் சிலர் உறுதியாக இருக்கிறார்கள். `பொருளாளர் பதவியை ஆ.ராசாவுக்குக் கொடுக்கப்போகிறார்கள் என்று சமூகவலைதளங்களில் தகவல்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. அதைக் கேள்விப்பட்டதும் கோபத்தைக் காட்டினார் ஆ.ராசா' என்கின்றனர் உடன்பிறப்புகள் வட்டாரத்தில்.

அன்பழகன், மு.கருணாநிதி
அன்பழகன், மு.கருணாநிதி

தி.மு.க-வில் பொதுச் செயலாளர் பதவியை அலங்கரித்த பேராசிரியர் அன்பழகன், கடந்த மார்ச் 7-ம் தேதி மறைந்தார். அடுத்த சில தினங்களிலேயே, `அடுத்த பொதுச் செயலாளர் யார்?’ என்கிற கேள்வி தி.மு.க-வுக்குள் அலையடிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில், தான் வகித்துவந்த பொருளாளர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார் துரைமுருகன். அதையடுத்து, `துரைமுருகன்தான் அடுத்த பொதுச் செயலாளர்’ என்ற செய்தி தி.மு.க-வுக்குள் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. அதை ஊர்ஜிதப்படுத்துவதுபோல், மு.க.ஸ்டாலினிடமிருந்து அறிவிப்பு வெளியானது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில், `கழகப் பொருளாளர் துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட விழைவதாகவும், எனவே தமது பொருளாளர் பொறுப்பிலிருந்து அவர் விலகுவதாகவும் கடிதம் வாயிலாக என்னிடம் தெரிவித்ததை ஏற்றுக்கொள்கிறேன். 29.3.2020 அன்று நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். கொரோனா முன்னெச்சரிக்கையாக தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, கனிமொழி, ஆ.ராசா, எ.வ.வேலு ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றன எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் டி.ஆர்.பாலு வகித்துவந்த முதன்மைச் செயலாளர் பதவியை நேருவிடம் வழங்கினார் ஸ்டாலின். இந்தச் சூழலில், கட்சிரீதியாக ஏதாவது ஒரு முக்கியமான பதவி தனக்கு வேண்டும் என டி.ஆர்.பாலு நினைக்கிறார். பொதுச் செயலாளர் பதவி இல்லை என்றால், பொருளாளர் பதவியாவது கொடுக்க வேண்டும் என்று டி.ஆர்.பாலு விடாப்பிடியாக இருக்கிறார்.

இந்நிலையில், ராசாவுக்குப் பொருளாளர் பதவி கொடுக்கப்போவது தொடர்பான வதந்தியால் கோபப்பட்ட ராசா, `எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என்னைப் பிடிக்காதவர்கள் எனக்கு எதிராக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். கட்சித் தலைமை முடிவு எடுக்கும் முன்பே இதுபோன்ற செய்திகள் வலம் வந்தால் நான் சொல்லித்தான் செய்திருக்கிறார்கள் என்பது தெரியாதா? என்னை வேண்டுமென்றே சிக்க வைக்க வேண்டும் நினைக்கிறார்கள்’ எனக் கூறியதாகத் தெரிவிக்கின்றனர் உடன்பிறப்புகள்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்

``வருகின்ற தேர்தலில் பட்டியலின சமூக மக்களின் வாக்குகளை குறிவைத்து அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியுள்ளன. பா.ஜ.க மாநிலத் தலைவராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டதும் இதே அடிப்படையில்தான். அந்த வரிசையில் தி.மு.க-வின் அந்தியூர் செல்வராஜ் ராஜ்யசபா வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டதும் இந்தக் கணக்கின் அடிப்படையில்தான். அந்த வரிசையிலேயே பொருளாளர் பதவிக்கு ராசாவை முன்னிறுத்தி சிலர் தகவல்களைப் பரப்பினர். ஆனால், பொருளாளர் பதவிக்கான ரேஸில் டி.ஆர்.பாலு முன்னணியில் இருக்கிறார்" என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.