Published:Updated:

``விவசாயிகளை மத்திய அரசு வஞ்சித்ததே, கர்நாடகத் தேர்தல் தோல்விக்குக் காரணம்!" - பி.ஆர்.பாண்டியன்

பி.ஆர்.பாண்டியன்

``விவசாயிகளை மத்திய அரசு வஞ்சித்ததின் விளைவாகத்தான் கர்நாடகத் தேர்தலில் பா.ஜ.க மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது.” - பி.ஆர்.பாண்டியன்

Published:Updated:

``விவசாயிகளை மத்திய அரசு வஞ்சித்ததே, கர்நாடகத் தேர்தல் தோல்விக்குக் காரணம்!" - பி.ஆர்.பாண்டியன்

``விவசாயிகளை மத்திய அரசு வஞ்சித்ததின் விளைவாகத்தான் கர்நாடகத் தேர்தலில் பா.ஜ.க மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது.” - பி.ஆர்.பாண்டியன்

பி.ஆர்.பாண்டியன்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்துகொண்டு  விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகளை குறித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், “தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமே சில பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறதோ என்று அஞ்சத் தோன்றுகிறது. குறிப்பாக இந்த மாவட்டத்தில் விளைநிலங்களில் காற்றாலை மின்கம்பங்கள் அமைப்பதற்கான பணிகளை ஊராட்சி அனுமதி இல்லாமல், விவசாயிகளின் ஒப்பதல் பெறாமல் அடியாட்களைக் கொண்டு மிரட்டி நிறுவுவது வேதனையளிக்கிறது.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

ஒரு தனியார் நிறுவனம் உயர் மின் கோபுரங்ளை அதன் விருப்பத்துக்கு அமைக்கிறது. விவசாயிகளை அச்சுறுத்தி அவர்கள் நிலத்தை அபகரிக்கிறது. இதனை மாவட்ட ஆட்சியர் கண்டும் காணாமல் இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் பனை மரங்களை காற்றாலை நிறுவனத்தினர் அழித்து வருகின்றனர். எனவே, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைகள், வேதாந்தாவின் சமீபகால நடவடிக்கைகள் மக்களுக்கு மிகுந்த சந்தேகம் அளிக்கிற வகையில் அமைந்திருக்கின்றன. பல உயிர்களை பலி கொடுத்து மூடப்பட்ட வேதாந்தா நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு நிதியைப் பெற்று, கிராமங்களுக்கு நலத்திட்டங்களைச் செய்கிறோம் என மாவட்ட ஆட்சியரே தலைமை தாங்கி செய்வது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. வேதாந்தாவை மூட வேண்டும் என்று சுமார் 15 ஆண்டுகளாகப் போராடி, 13 உயிர்களை பலிகொடுத்திருக்கிறோம். அதன் பின்னரே வேதாந்தா நிறுவனம் மூடப்பட்டது.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

ஆனால், இதையொட்டியான மாவட்ட ஆட்சியரின் அணுகுமுறைகள் மிகப் பெரிய அளவில் போராடிய மக்களுக்கு, உயிரை பறிகொடுத்த குடும்பங்களுக்கு அச்சத்தையும் சந்தேகத்தையும் எழுப்புகின்றன. முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போது குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டன. ஆனால், தற்போதைய அரசு, நீர்நிலைகளைப் பாதுகாக்காமல் மணல் கொள்ளையில் ஈடுபடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. விவசாயிகளை மத்திய அரசு வஞ்சித்ததின் விளைவாகத்தான் கர்நாடகத் தேர்தலில் பா.ஜ.க மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது” என்றார்.