Published:Updated:

பீகார்: ``அரசு இதைச் செய்தால் பிரசாரத்தை வாபஸ் பெறத் தயார்..!" - பிரசாந்த் கிஷோர் சொல்வதென்ன?

பிரசாந்த் கிஷோர்

பீகாரில் புதிய அரசாங்கம் இரண்டு ஆண்டுகளில் 5-10 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கினால் நிதிஷ் குமார் அரசுக்கு ஆதரவு தருவதாக பிரஷாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார்.

பீகார்: ``அரசு இதைச் செய்தால் பிரசாரத்தை வாபஸ் பெறத் தயார்..!" - பிரசாந்த் கிஷோர் சொல்வதென்ன?

பீகாரில் புதிய அரசாங்கம் இரண்டு ஆண்டுகளில் 5-10 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கினால் நிதிஷ் குமார் அரசுக்கு ஆதரவு தருவதாக பிரஷாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
பிரசாந்த் கிஷோர்

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க-வுடனான கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியமைத்திருக்கிறது.

நிதிஷ் குமார் அண்மையில் சுதந்திர தின உரையின்போது, ​``பீகார் மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் துறைகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக இணைந்து வேலைவாய்ப்புகளை வழங்குவோம். வளர்ந்த மாநிலங்கள் வரிசையில் பீகாரை இடம்பெறச் செய்வதே எங்கள் இலக்கு” ​​எனப் பேசியிருந்தார்.

நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ்
நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ்

இந்த நிலையில், நிதிஷ் குமாரின் பேச்சு தொடர்பாக தன்னுடைய ஆதரவாளர்களிடையே பேசிய பிரசாந்த் கிஷோர், ``பீகாரில் அமைந்திருக்கும் புதிய அரசாங்கம் இரண்டு ஆண்டுகளில் 5-10 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கினால், நான் என்னுடைய ‘ஜன் சூரஜ் அபியான்’ பிரசாரத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு நிதிஷ் குமார் அரசுக்கு ஆதரவு அளிப்பேன்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

நான் பீகாரில் அரசியல் களத்தில் இறங்கி மூன்று மாதங்கள்தான் ஆகின்றன. மாநிலத்தின் அரசியல் 180 டிகிரி திருப்பத்தைப் பெற்றிருக்கிறது. எதிர்காலத்தில் மேலும் பல அரசியல் எழுச்சிகளை இந்த மாநிலம் சந்திக்கும்'' என்றார்.