Published:Updated:

``இந்தியாவுக்கான யுத்தம் 2024-ல் தான்..!'' - பிரதமர் மோடிக்கு பிரசாந்த் கிஷோர் பதில்

பிரசாந்த் கிஷோர்

``இந்தியாவுக்கான யுத்தம் 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தான் இருக்கிறது” என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

``இந்தியாவுக்கான யுத்தம் 2024-ல் தான்..!'' - பிரதமர் மோடிக்கு பிரசாந்த் கிஷோர் பதில்

``இந்தியாவுக்கான யுத்தம் 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தான் இருக்கிறது” என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
பிரசாந்த் கிஷோர்

பிரதமர் மோடி பாஜக நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றதை பற்றி நேற்று பேசிய போது, ``ஏழை மக்கள் பாஜக மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இந்த நான்கு மாநிலங்களின் தீர்ப்பே காட்டுகிறது. தற்போது நடைபெற்று முடிந்த மாநில தேர்தல் பாஜகவின் வெற்றி. இது ஒரு வரலாற்று சாதனை. 2022 தேர்தல் முடிவுகள், 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்'' என கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு குறித்து பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ``இந்தியாவுக்கான யுத்தம் 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தான் இருக்கிறதே தவிர, மாநிலத் தேர்தலில் இல்லை. இது சாஹேபுக்கு (பிரதமர் மோடிக்கு) நன்றாக தெரியும். இருப்பினும் மிக புத்திசாலித்தனமாக இந்த தேர்தலை, அந்த தேர்தலுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இந்த தவறான கருத்துக்கு உடன்பட்டு விடாதீர்கள்’' என பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism