Published:Updated:

``காங்கிரஸ் என்னை நீக்கவேண்டுமென்று கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன்!"- ஹரிஷ் ராவத் ட்வீட்

உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்

`என் மீதான இந்த குற்றச்சாட்டுகளின் வெளிச்சத்திலிருந்து காங்கிரஸ் என்னை வெளியேற்ற வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.' - ஹரிஷ் ராவத் ட்வீட்

``காங்கிரஸ் என்னை நீக்கவேண்டுமென்று கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன்!"- ஹரிஷ் ராவத் ட்வீட்

`என் மீதான இந்த குற்றச்சாட்டுகளின் வெளிச்சத்திலிருந்து காங்கிரஸ் என்னை வெளியேற்ற வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.' - ஹரிஷ் ராவத் ட்வீட்

Published:Updated:
உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் ஒரு மாநிலத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. 5 மாநிலங்களில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும், மற்ற 4 மாநிலங்களில் பா.ஜ.க-வும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் 19 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியுற்றது. அதிலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பரப்புரைக்கு அந்த மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான ஹாரிஸ் ராவத் தான் தலைமை தாங்கினார். இதன் காரணமாக உத்தரகாண்டில் காங்கிரஸின் தோல்விக்கு ஹரிஸ் ராவத் தான் காரணம், அவர் பணத்துக்காக செயல்பட்டார் என ஹரிஸ் ராவத் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

உத்தரகாண்டில் காங்கிரஸ் தோல்வி
உத்தரகாண்டில் காங்கிரஸ் தோல்வி

இந்த நிலையில், ஹாரிஸ் ராவத் தன்மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று ட்வீட் செய்திருக்கிறார். அதில், ``என் மீதான இந்த குற்றச்சாட்டுகளின் வெளிச்சத்திலிருந்து காங்கிரஸ் என்னை வெளியேற்ற வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். தீமைகளிலிருந்து விடுபட ஹோலி ஒரு பொருத்தமான சந்தர்ப்பம். என்னை போன்ற தீமைகளையும் இந்த ஹோலியில் காங்கிரஸ் எரிக்க வேண்டும்" என குறிப்பிட்டு ஹிந்தியில் ட்வீட் செய்திருக்கிறார்.

மேலும், "முதல்வராகவும், கட்சியின் மாநிலத் தலைவராகவும், கட்சியின் பொதுச் செயலாளராகவும், காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினராகவும் இருந்த ஒருவர் மீது கட்சியின் சீட்டுகளை விற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும், கட்சியில் மிக முக்கிய பொறுப்பில் உள்ள நபரின் ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.