Published:Updated:

``சென்னை முதல் கன்னியாகுமரி வரை மின்வெட்டு!" - செந்தில் பாலாஜியை விமர்சித்த பிரேமலதா

பேட்டியளிக்கும் பிரேமலதா

"சென்னை முதல் கன்னியாகுமரி வரை மின்வெட்டு தொடங்கிவிட்டது. செந்தில் பாலாஜி, மின்வெட்டு குறித்து சமாளிக்கும் வகையில் பேட்டி அளிப்பதை விட்டுவிட்டு, செயலில் காட்டவேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்

``சென்னை முதல் கன்னியாகுமரி வரை மின்வெட்டு!" - செந்தில் பாலாஜியை விமர்சித்த பிரேமலதா

"சென்னை முதல் கன்னியாகுமரி வரை மின்வெட்டு தொடங்கிவிட்டது. செந்தில் பாலாஜி, மின்வெட்டு குறித்து சமாளிக்கும் வகையில் பேட்டி அளிப்பதை விட்டுவிட்டு, செயலில் காட்டவேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்

Published:Updated:
பேட்டியளிக்கும் பிரேமலதா

கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கரூர் வருகை தந்தார், தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா. அப்போது, செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ``தமிழகத்தில் நாளுக்கு நாள் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தில் மின்வெட்டு தொடங்கிவிட்டது. கடந்த காலத்தைப் போல தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்ற தி.மு.க அரசு செயல்பட வேண்டும். தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு தான் என்று எல்லாத் தரப்பு மக்களும் பேசி வருகின்றனர். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் மின்வெட்டு குறித்து கூற தமிழகத்திற்கு எதற்கு மின்சாரத்துறை அமைச்சர்?. தமிழக மின்வெட்டு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசவேண்டும்.

பேட்டியளிக்கும் பிரேமலதா
பேட்டியளிக்கும் பிரேமலதா

அதேபோல், மின்சாரத்துறை அமைச்சர் மின்வெட்டு குறித்து சமாளிக்கும் வகையில் பேட்டி அளிப்பதை விட்டுவிட்டு, அந்த பிரச்னை தீரும்வகையில் செயலில் காட்டவேண்டும். தமிழகத்தில் மின்வெட்டு தற்போது இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி வருவது, உண்மைக்கு புறம்பான தகவலாகும். சென்னையில் எனது வீட்டில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள மின்சார துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போக்குவரத்து துறையில் 30 சதவீத பேருந்துகள் தரமில்லாமல் இயக்கப்படுகிறது. தி.மு.க ஆட்சி வருவதற்கு முன், அ.தி.மு.க அரசை கண்டித்து தி.மு.கவினர் போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால், தற்போது வாய்மூடி மௌனம் காக்கிறார்கள். காலாவதியான தரமற்ற பேருந்துகளை அப்புறப்படுத்திவிட்டு, பயணிகளுக்கு தரமான பேருந்து சேவை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக கோரிக்கை விடுக்கிறது. அதேபோல், மது விற்பனை தமிழகத்தில் அதிகமாக நடைபெற்று வருகிறது என செய்தித்தாளில் படித்தேன். இந்த அரசு சமுதாயத்தை சீரழித்து வருகிறது.

பேட்டியளிக்கும் பிரேமலதா
பேட்டியளிக்கும் பிரேமலதா

இனிவரும் காலங்களில் இளைஞர்களுக்கு மதுக்கடைகளில் மது விற்பனை இல்லை என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கேப்டன் விஜயகாந்த் பலமுறை செயல்பட்டுள்ளார். அதேபோல், இலங்கை தமிழர்களுக்கு எப்போதும் தே.மு.தி.க துணை நிற்கும். விரைவில் தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க முக்கிய அங்கம் வகிக்கும். தமிழகத்தில் தே.மு.தி.க இல்லாமல் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட எந்த கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழல் மறுபடியும் உருவாகும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism