Published:Updated:

`அதிகாரம் இருக்கு என்பதற்காக எதையும் செய்வதா?' - மகாராஷ்ட்ரா நிலவரம் குறித்து பிரேமலதா

நம் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக்கூடாது என மகாராஷ்ட்ரா அரசியல் நிலவரம் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்திருக்கிறார்.

பிரேமலதா
பிரேமலதா ( என்.ஜி.மணிகண்டன் )

''உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க-விடம் 50 சதவிகித இடங்களைக்கூட நாங்கள் கேட்போம். கூட்டணி தர்மப்படி அவர்கள் எவ்வளவு ஒதுக்குகிறார்கள் என்று பார்ப்போம்'' என்று தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா பேசியுள்ளது கூட்டணிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேமலதா
பிரேமலதா

கட்சி நிர்வாகியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா இன்று மதுரை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ``மகராஷ்ட்ராவில் அரசு அமைப்பதில் பி.ஜே.பி அவசரப்பட்டு விட்டது. நம் கையில் அதிகாரம் இருப்பதால் எதையும் செய்யக் கூடாது.

உள்ளாட்சியில் மேயர் உட்பட தலைவர் பதவிகளை நேரடியாகத் தேர்வு செய்யாமல் மறைமுகமாகத் தேர்வு செய்யும் முறையை தி.மு.க-வினர்தான் கொண்டு வந்தனர். இது ஒன்றும் தவறில்லை.

பிரேமலதா
பிரேமலதா

நாங்கள் இப்போதும் அ.தி.மு.க கூட்டணியில்தான் இருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில் உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவிகித இடங்களைக்கூட கேட்போம். ஆனால், கூட்டணி தர்மப்படி அ.தி.மு.க எவ்வளவு ஒதுக்குகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

எடப்பாடி வியூகத்துக்கு வேட்டு வைக்கிறாரா அமைச்சர் பாஸ்கரன்? - விஜயகாந்த் குறித்த பேச்சால் சர்ச்சை

இதற்காக எங்கள் கட்சியில் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்துவோம். உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகித இடங்களை ஒதுக்குவோம்'' என்றார்.

பிரேமலதா
பிரேமலதா

''கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களுக்கு விஜயகாந்த்தின் நிலைதான் ஏற்படும் என்று அமைச்சர் பாஸ்கரன் கூறியுள்ளாரே?' என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, ``பாஸ்கரன் என்று ஒரு அமைச்சர் இருப்பதே இப்போதுதான் எனக்குத் தெரியும், அவர் என்ன துறை அமைச்சர்?'' என்று முடித்துக்கொண்டார். ``மதுரை உட்பட முக்கிய மாநகராட்சிகளில் போட்டியிட கேட்டு எங்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தும்'' என்றார்.