Published:Updated:

``வீட்டில் உங்கள் தாய்மொழியிலேயே பேசுங்கள்!'' - மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த அமித் ஷா

உள்துறை அமைச்சர் அமித் ஷா

மாணவர்கள் தங்களின் தாய்மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியிருக்கிறார்.

``வீட்டில் உங்கள் தாய்மொழியிலேயே பேசுங்கள்!'' - மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த அமித் ஷா

மாணவர்கள் தங்களின் தாய்மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியிருக்கிறார்.

Published:Updated:
உள்துறை அமைச்சர் அமித் ஷா

குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், ``புதிதாக பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நாட்டையும் சமூகத்தையும் மேம்படுத்த உழைக்க வேண்டும். மாணவர்களும், இளைஞர்களும் எந்த மொழியில் வேண்டுமென்றாலும் கல்வி கற்றுக் கொள்ளலாம். ஆனால் உங்களின் தாய் மொழியை பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

வீட்டில் தாய் மொழியிலேயே பேசுவதையும், எழுதுவதையும் படிப்பதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இப்போது பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் போன்ற படிப்புகளில் தாய்மொழியில் கல்வி கற்பதை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. நாட்டின் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களுக்கு அறிவையும், திறனையும் வழங்கும் நோக்கத்தில் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது" என்றார்.