Published:Updated:

``பாஜக தலைவர்கள் அனைவரும் தங்களின் பழைய நண்பர் யஷ்வந்தை ஆதரிக்கவேண்டும்!" - சத்தீஸ்கர் முதல்வர்

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்

``எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரும், தங்களின் பழைய நண்பருமான யஷ்வந்த் சின்ஹாவை பா.ஜ.க-வின் அனைத்து தலைவர்களும் ஆதரிக்க வேண்டும்" - சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்

``பாஜக தலைவர்கள் அனைவரும் தங்களின் பழைய நண்பர் யஷ்வந்தை ஆதரிக்கவேண்டும்!" - சத்தீஸ்கர் முதல்வர்

``எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரும், தங்களின் பழைய நண்பருமான யஷ்வந்த் சின்ஹாவை பா.ஜ.க-வின் அனைத்து தலைவர்களும் ஆதரிக்க வேண்டும்" - சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்

Published:Updated:
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்

காங்கிரஸ் தலைவரும், சத்தீஸ்கர் மாநில முதல்வருமான பூபேஷ் பாகேல், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க, தங்களின் பழைய நண்பரான யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஜார்கண்டின் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார்.

யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு
யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும், திரிணாமுல் காங்கிரஸின் துணைத் தலைவராகவும் இருந்த யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், பா.ஜ.க-வும், எதிர்க்கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரிக்குமாறு அனைத்து மாநில அரசியல் கட்சிகளிடமும் கூறிவருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்

இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல், ``பா.ஜ.க தனது மனதின் குரலைக் கேட்கிறதென்றால், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரும், தங்களின் பழைய நண்பருமான யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக திரௌபதி முர்முவை ஆதரிக்குமாறு பா.ஜ.க கூறியதையடுத்து, பூபேஷ் பாகேலிடமிருந்து இத்தகைய கருத்து வந்துள்ளது.