Published:Updated:

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு - யார் இவர்? | முழுப் பின்னணி

திரௌபதி முர்மு - மோடி

பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக் கூட்டணி சார்பில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் கவனம்பெற்றிருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு - யார் இவர்? | முழுப் பின்னணி

பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக் கூட்டணி சார்பில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் கவனம்பெற்றிருக்கிறது.

Published:Updated:
திரௌபதி முர்மு - மோடி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 25-ம் தேதியுடன் முடிவடையவிருக்கும் நிலையில், இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகின்ற ஜூலை 18-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதையடுத்து, பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக் கூட்டணி சார்பில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் கவனம்பெற்றிருக்கிறது.

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

யார் இந்த திரௌபதி முர்மு... அவர் கடந்து வந்த பாதை என்ன?

பிறப்பும் படிப்பும்:

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாநிலத்திலுள்ள பாடிபோசி எனும் கிராமத்தில் 1958-ம் ஆண்டு, ஜூன் 20-ம் தேதி பிறந்தார் திரெளபதி முர்மு. தனது கல்லூரிப் படிப்பை புவனேஸ்வரிலுள்ள ரமா தேவி மகளிர் கல்லுாரியில் முடித்தார். அதன் பிறகு, பள்ளி ஆசிரியையாக நீண்ட காலம் பணியாற்றினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சந்தால் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவருக்கு, ஷ்யாம் சரண் முர்மு என்பவருடன் திருமணம் ஆனது. இரண்டு மகன், ஒரு மகள் என மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த திரெளபதி முர்மு, திருமணமான சில ஆண்டுகளிலேயே விபத்து ஒன்றில் தனது கணவனைப் பறிகொடுத்தார். அதுமட்டுமல்லாமல், உடல்நலக்குறைவால் அவரின் இரண்டு மகன்களும் உயிரிழந்தனர்.

திரெளபதி முர்மு
திரெளபதி முர்மு

அரசியல் பாதை:

பின்னர் ஆசிரியைப் பணியைத் துறந்தவர், பா.ஜ.க-வில் இணைந்து முழு நேர அரசியலில் இறங்கினார். முதன்முதலாக 1997-ம் ஆண்டு நடந்த ராய்ரங்பூர் பஞ்சாயத்துத் தேர்தலில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், 2000-ம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில், ராய்ரங்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு, தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். பா.ஜ.க - பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் 2000 முதல் 2002 வரை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும், 2002 முதல் 2004 வரை மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சராகவும் பதவியில் இருந்தார்.

ஒடிசா மாநிலம்
ஒடிசா மாநிலம்

2004-ம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ராய்ரங்பூர் தொகுதியில் போட்டியிட்ட திரௌபதி முர்மு இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரௌபதி முர்முவின் சிறப்பான செயல்பாடுகளுக்காக, 2007-ம் ஆண்டு சிறந்த ஒடிசா சட்டப்பேரவை உறுப்பினருக்கான நீலகந்தா விருது அவருக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு 2009 வரை எம்.எல்.ஏ-வாக இருந்தார். அதேசமயம், 2006 முதல் 2009 வரை பா.ஜ.க-வின் பழங்குடிப் பிரிவான `எஸ்.டி.மோர்ச்சா'வின் மாநிலத் தலைவராகவும் இருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜார்க்கண்ட் முதல் பெண் ஆளுநர்:

2015-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட திரௌபதி முர்மு, மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற புகழையும் தட்டிச் சென்றார். அதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவியில் இருந்தார்.

 திரௌபதி முர்மு-ராம்நாத் கோவிந்த்
திரௌபதி முர்மு-ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் வேட்பாளர்:

ஏற்கெனவே கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவின் பெயரும் பரிசீலனையில் இருந்தது. ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து பட்டியலினத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் கடந்த முறை குடியரசுத் தலைவராக்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது நடைபெறவிருக்கும் 15-வது குடியரசுத் தலைவர் தேர்தலில், ஒடிசா மாநிலத்திலிருந்து பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு, ஆளும் பா.ஜ.க கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தத் தேர்தலில் இவர் வெற்றிபெற்றால், இந்தியாவின் முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் என்ற புகழை அடைவார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism