Published:Updated:

ராஜஸ்தான் பட்டியலின மாணவன் மரணம்... ``குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்” - மாயாவதி

மாயாவதி

``ராஜஸ்தானில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்’’ என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்திருக்கிறார்.

ராஜஸ்தான் பட்டியலின மாணவன் மரணம்... ``குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்” - மாயாவதி

``ராஜஸ்தானில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்’’ என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
மாயாவதி

ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்துவந்த, பட்டியலின மாணவர் தாகமெடுத்ததால் பள்ளியிலிருந்த தண்ணீர்ப் பானையைத் தொட்டு தண்ணீர் எடுத்து குடிக்க முயன்றிருக்கிறார். அதைக் கண்டு ஆத்திரமடைந்த பள்ளி ஆசிரியர் சாயில் சிங் (40) என்பவர், அந்தப் பட்டியலின மாணவரை மிகக் கடுமையாகத் திட்டித் தீர்த்ததுடன், சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை முன்வைத்துவருகின்றனர்.

தீண்டாமை கொடூரம்
தீண்டாமை கொடூரம்

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பதிவில், `` ராஜஸ்தானில் உள்ள தனியார் பள்ளியில் 9 வயது பட்டியலின மாணவர், தாகம் எடுத்தபோது, ​​பானையிலிருந்து தண்ணீரைக் குடித்தபோது, ஆசிரியர் ஒருவரால் கொடூரமாகத் தாக்கப்பட்டார், அவர் சிகிச்சையின்போது நேற்று இறந்தார்.

நெஞ்சை உருக்கும் இது போன்ற வேதனையான சாதிவெறிச் சம்பவங்கள் ராஜஸ்தானில் அடிக்கடி நடக்கின்றன. மக்களின், குறிப்பாக பட்டியலின, பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் அங்குள்ள காங்கிரஸ் அரசு முற்றிலும் தோல்வியடைந்திருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் தெளிவாகக் காட்டுகிறது. எனவே, இந்த அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.