Published:Updated:

மத்திய பட்ஜெட்: `சாத்தியமானவற்றை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கை!’ - ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

``2022- 2023-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சாத்தியமானவற்றை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையாக உள்ளது” என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்: `சாத்தியமானவற்றை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கை!’ - ஓ.பன்னீர்செல்வம்

``2022- 2023-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சாத்தியமானவற்றை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையாக உள்ளது” என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022- 23-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நிர்மலா சீதாராமன் 4-வது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இது குறித்து எதிர்க்கட்சியினர் பலரும் தங்களது கலவையான விமர்சனத்தை முன்வைத்துவருகின்றனர்.

பட்ஜெட் 2022 -நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் 2022 -நிர்மலா சீதாராமன்

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ``ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதி குறித்து நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் இல்லம் என்பதன் அடிப்படையில் 80 லட்சம் வீடுகள் கட்ட 48,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் வீடில்லா ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கிடைக்க வழிவகுக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த முதலீட்டில் மாநிலங்கள் அதிகரிக்கும் வகையில், ஒரு லட்சம் கோடி ரூபாய் வரவு செலவு திட்டத்தில் ஒடுக்கப்பட்டிருப்பது, வழக்கமாக மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிதி அல்லாமல், இந்த நிதி 50 ஆண்டுக்கால வட்டி இல்லா கடனாக மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்திருப்பது மாநிலங்களுக்கு பேருதவியாக இருக்கும்.

வேளாண் வளர்ச்சி மற்றும் வேளாண் நவீனமயமாக்கல் ஆகியவற்றுக்கு நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான அனைத்துத் துறைகளும் மத்திய அரசால் இந்த நிதிநிலை அறிக்கையில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிதிநிலை அறிக்கை சாத்தியமானவற்றை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கையாக உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையை மக்களிடையே உருவாக்கும் என நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism