Published:Updated:

தடுப்பூசிக்கு ஒப்புதல்: `கோவிட் இல்லா தேசம்... முக்கிய திருப்புமுனை!’ - பிரதமர் மோடி

மோடி
மோடி

`கொரோனாவுக்கு எதிரான யுத்ததில் நமக்கு பலம் சேர்க்கும் முக்கியத் திருப்புமுனை இந்த தடுப்பூசி’ - பிரதமர் மோடி

இந்தியாவில் நிபுணர்குழுவின் பரிந்துரையை ஏற்று கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குவதாக, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்திருக்கிறது. அவசரகால தேவைகளுக்கு இந்த மருந்துகளைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனைத் தொடர்ந்து இரண்டாவது நாடாக இந்தியா கோவிஷீல்டு மருந்துக்கு ஒப்புதல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு மருந்துகளையும் 2 முதல் 8 டிகிரி செல்சியஷில் பராமரிக்கலாம் என்றும் கூறப்படடிருக்கிறது.

``தடுப்பூசியில் சிறிதளவு பாதுகாப்பு சிக்கல் இருந்தால்கூட நாங்கள் ஒப்புதல் அளிக்க மாட்டோம். தடுப்பூசிகள் 100 சதவிகிதம் பாதுகாப்பானவை. லேசான காய்ச்சல், வலி மற்றும் ஒவ்வாமை போன்ற சில பக்கவிளைவுகள் எல்லா தடுப்பூசிக்கும் பொதுவானவை” என இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஜெனரல் வி.ஜி.சோமானி தெரிவித்தார்.

தடுப்பூசி
தடுப்பூசி

இந்தநிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, ``கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் நமக்கு பலம் சேர்க்கும் முக்கியத் திருப்புமுனை இந்தத் தடுப்பூசி. சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் தடுப்பூசிகளுக்கு டி.சி.ஜி.ஐ ஒப்புதல் அளித்திருப்பது ஆரோக்கியமான வாழ்வுக்கு இட்டுச் செல்லும். மேலும் கோவிட் இல்லா தேசத்துக்கும் இது வழிவகை செய்யும். வாழ்த்துகள் இந்தியா... கடின உழைப்பை வெளிப்படுத்திய விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு வாழ்த்துகள் ” எனத் தெரிவித்திருக்கிறார்.

மதுரை: 2021 சட்டப்பேரவைத் தேர்தல் நிலைப்பாடு என்ன?! - ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தும் அழகிரி #NowAtVikatan
அடுத்த கட்டுரைக்கு