Published:Updated:

மத்திய அமைச்சராகிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்! - வெளியானது அமைச்சரவைப் பட்டியல்!

அமைச்சரவை
அமைச்சரவை

அமைச்சரவைப் பட்டியலில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் இடம்பெற்றிருக்கிறார். இதன் மூலம் எல்.முருகன் இன்று மாலை மத்திய அமைச்சராகப் பதவியேற்கவிருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, மத்தியில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. இரண்டாவது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்றார். இந்தநிலையில், அவரது தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாகக் கடந்த சில நாள்களாகவே அறிவிப்புகள் வெளியாகிவந்தன. புதிய அமைச்சரவையில் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்துவந்தது. இந்தநிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

கூட்டம்
கூட்டம்

இந்தப் பட்டியலில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் இடம்பெற்றிருக்கிறார். இதன் மூலம் எல்.முருகன் இன்று மாலை மத்திய அமைச்சராகப் பதவியேற்கவிருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

ஜோதிராதித்ய சிந்தியா, அஸ்வினி வைஷ்ணவ், பசுபதி குமார், கிரண் ரிஜிஜு, ராஜ்குமார் சிங், கிஷன் ரெட்டி, அனுராக் சிங் தாக்கூர், அன்னபூர்ணா தேவி, நாராயணசாமி, பி.எல்.வர்மா, அஜய்குமார் என 43 பேர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு