Published:Updated:

திண்டுக்கல்: பிரதமர் வருகைக்கு தீவிர ஏற்பாடுகள் - சஸ்பென்ஸ் காக்கும் காந்தி கிராமப் பல்கலைக்கழகம்!

காந்தி கிராம பல்கலைக்கழகம்

சுமார் 2,400 மாணவ-மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நவம்பர் 11-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி ஆகியோரும் பங்கேற்கவிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன.

திண்டுக்கல்: பிரதமர் வருகைக்கு தீவிர ஏற்பாடுகள் - சஸ்பென்ஸ் காக்கும் காந்தி கிராமப் பல்கலைக்கழகம்!

சுமார் 2,400 மாணவ-மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நவம்பர் 11-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி ஆகியோரும் பங்கேற்கவிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன.

Published:Updated:
காந்தி கிராம பல்கலைக்கழகம்

நாட்டின் காந்திய சிந்தனை மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான முதல் மத்திய பல்கலைக்கழகம் என்ற பெருமை திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் கடந்த 1976-ல் தொடங்கப்பட்ட காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு உண்டு. தற்போது இங்கு 70 பேராசிரியர்கள், 140 அலுவலக ஊழியர்கள் பணியாற்றிவரும் நிலையில், சுமார் 4,000 மாணவ-மாணவிகள் பயின்றுவருகின்றனர். 

விழா அரங்கம்
விழா அரங்கம்

இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் அடிக்கடி மாற்றப்பட்டுக்கொண்டிருந்ததாலும், கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாகவும், கடந்த 2017-2018, 2018-2019, 2020-2021 ஆகிய கல்வியாண்டுகளுக்கான பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படாமல் இருந்தன. இதற்கிடையே மீண்டும் பல்கலைக்கழக வேந்தராக கே.எம்.அண்ணாமலை பொறுப்பேற்றார். புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் கூடுதல் பொறுப்பாக காந்தி கிராமப் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், 2017-2018, 2018-2019 ஆகிய கல்வியாண்டுகளில் பயின்ற சுமார் 2,400 மாணவ-மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நவம்பர் 11-ம் தேதி (வரும் வெள்ளிக்கிழமை) நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி ஆகியோரும் பங்கேற்கவிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன. 

அரங்கத்தில் ஆய்வு மேற்கொள்ளும் போலீஸார்
அரங்கத்தில் ஆய்வு மேற்கொள்ளும் போலீஸார்

அதன்படி, பல்கலை வளாகத்திலுள்ள நிகழ்ச்சி அரங்கம், பார்வையாளர்கள் அரங்கம், ஹெலிபேட் தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. ஹெலிபேட் முதல் அரங்கம் வரையுள்ள தாழ்வான மரக்கிளைகள் அகற்றப்பட்டுவிட்டன. நிகழ்ச்சி அரங்கம் நடைபெறும் பகுதிகள் தகரச் சீட்டுகளால் அடைக்கப்பட்டுவருகின்ரன. பல்கலை வளாகத்திலுள்ள சாலைகள் அனைத்தையும் புதுப்பிக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இதேபோல வளாகம் முழுவதும் சிறப்பு பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். வளாகத்தில் நுழையும் அனைவரும் முழுமையான பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். வெடிகுண்டு சோதனையும் நடத்தப்படுகிறது. 

மாவட்ட கலெக்டர் விசாகன், மத்திய கல்வித்துறை கூடுதல் செயலர் காமினி, கூடுதல் டி.ஜி.பி தாமரைக்கண்ணன், மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி, தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க், எஸ்.பி பாஸ்கரன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்துவருகின்றனர். இதேபோல பொதுப்பணித்துறை, மின்வாரியம், சுகாதாரத்துறை என ஒவ்வொரு துறையினரும் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பணியை மேற்கொண்டுவருகின்றனர். ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப்பணியும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. 

கலெக்டர் ஆய்வு
கலெக்டர் ஆய்வு

ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்துவரும் நிலையில்,  திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தற்போதுவரை பிரதமர், முதல்வர் வருகை குறித்த உறுதியான தகவல்கள் சொல்லப்படவில்லை. 

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் செய்தியாளர் சந்திப்பின்போது, பிரதமர் மோடி திண்டுக்கல் வரவிருப்பதாக அறிவித்தார். நேற்று காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்ட பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், ``பிரதமர் வருகை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மதியம் 2 மணிக்குத் தொடங்கி 4 மணி வரை பல்கலையில் நடக்கும் நிகழ்வில் மோடி பங்கேற்கவிருக்கிறார்" என்றார். 

ஹெலிபேட் தளம் ஆய்வு
ஹெலிபேட் தளம் ஆய்வு

பல்கலைத் தரப்பில் பிரதமர் வருகை உறுதி செய்யப்படாதது குறித்து விசாரித்தபோது, ``விழா நடக்கும் அரங்கத்தில் 1,600 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால், பிரதமர் நிகழ்ச்சி என்பதால் மேடையின் முன்பகுதி காலியாக வைக்கப்பட வேண்டும் என்பதால் 800 பேர் மட்டுமே அமர முடியும் என்ற நிலை உள்ளது. அரங்கத்தின் பின்பகுதி காடுகளாகவும், புதர்மண்டியும் கிடப்பதால் தகரம்வைத்து அடைக்கப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சி நடைபெறும் பகுதி மிகவும் குறுகலாகவும் இருக்கிறது. தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது. மதுரை வாடிப்பட்டி முதல் திண்டுக்கல் வரை நான்குவழிச் சாலை இடையே பாலம் கட்டும் வேலை நடைபெறுகிறது. சில இடங்களில் சாலைகள் தேசமடைந்திருக்கின்றன.

அதிகாரிகள் ஆய்வு
அதிகாரிகள் ஆய்வு

மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் வந்தபோது ஒரு மாத காலம் பாதுகாப்பு மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் தற்போது போதிய அவகாசம் இல்லாததால் அவசர கோலத்தில் பணிகள் நடந்துவருகின்றன. பிரதமர் அலுவலகத் தரப்பிலிருந்தும் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. இது போன்ற காரணங்கள்தான் பல்கலைத் தரப்பில் பிரதமர் வருகை உறுதிசெய்யப்படாமல் இருக்கக் காரணம். பிரதமர் வர முடியவில்லை என்றால் காணொளி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புண்டு" எனக் கூறுகிறார்கள்.

காந்தி கிராமப் பல்கலைக்கழகம்
காந்தி கிராமப் பல்கலைக்கழகம்

விழா ஏற்பாடுகள் செய்யும் பல்கலை நிர்வாகத்திடம் பேசியபோது, ``தற்போதுவரை எங்களுக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து பிரதமர் வருகை குறித்த அதிகாரபூர்வ தகவல் கிடைக்கவில்லை. அதனால் யார் யார் பங்கேற்கின்றனர் என்று தெரியவில்லை. நிகழ்ச்சி நிரல் குறித்த அழைப்பிதழ்கூட அச்சிடப்படவில்லை. வியாழனன்று இது தொடர்பான உறுதியான தகவல்கள் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கப்படும்" என்றனர்.