Published:Updated:

Live Updates: ``தமிழகத்தின் மொழி, கலாசாரத்தைக் கொண்டாட காசி தயாராக இருக்கிறது!" - பிரதமர் மோடி

பிரதமர் மோடி
Live Update
பிரதமர் மோடி

திண்டுக்கல், காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். அது தொடர்பான லைவ் அப்டேட்ஸ்...

11 Nov 2022 5 PM

``தமிழகத்தின் மொழி, கலாசாரத்தைக் கொண்டாட காசி தயாராக இருக்கிறது!" - பிரதமர் மோடி

Live Updates: ``தமிழகத்தின் மொழி, கலாசாரத்தைக் கொண்டாட காசி தயாராக இருக்கிறது!" - பிரதமர் மோடி

பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ``சங்க காலத்திலேயே தமிழர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவு குறித்த விழ்ப்புணர்வுடன் இருந்திருக்கின்றனர். தமிழகத்தின் மொழி, கலாசாரத்தைக் கொண்டாட காசி தயாராக இருக்கிறது. தேச ஒற்றுமையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

11 Nov 2022 4 PM

``தமிழைக் கற்க வேண்டும் என்றவர் காந்தியடிகள்!" - முதல்வர் ஸ்டாலின்

பட்டமளிப்பு விழா மேடையில் பேசிக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், ``தமிழைக் கற்க வேண்டும் என்றவர் காந்தியடிகள். தமிழ்நாட்டில் மாநில அரசின் கீழ் 22 பல்கலைக்கழகங்கள் இயங்கிவருகின்றன. தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்து விளங்கிவருகிறது" எனக் கூறினார்.

11 Nov 2022 4 PM

``கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்!" - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

பட்டமளிப்பு விழா மேடையில் பேசிக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், ``கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

11 Nov 2022 4 PM

இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி!

Live Updates: ``தமிழகத்தின் மொழி, கலாசாரத்தைக் கொண்டாட காசி தயாராக இருக்கிறது!" - பிரதமர் மோடி

பட்டமளிப்பு விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார் பிரதமர் மோடி.

11 Nov 2022 4 PM

பிரதமர், மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிவருகிறார்!

காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம் வந்தடைந்த பிரதமர் மோடி, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிவருகிறார்.

11 Nov 2022 3 PM

ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராம கிராமியப் பல்கலை வந்தடைந்தார் பிரதமர் மோடி!

மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளம்பிய பிரதமர் மோடி, சற்று முன்பு திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம் வந்தடைந்தார்.

11 Nov 2022 3 PM

தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்து சேர்ந்தார் பிரதமர் மோடி!

காந்திகிராம பல்கலைக்கழகம்
காந்திகிராம பல்கலைக்கழகம்

பெங்களுரில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்கலைக்கழகத்துக்குக் கிளம்பினார்.

11 Nov 2022 3 PM

பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா!

காந்தி கிராமப் பல்கலைக்கழகம்
காந்தி கிராமப் பல்கலைக்கழகம்

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியிலிருக்கும் காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கவிருக்கிறார். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். 

இதே நிகழ்ச்சியில் பிரதமர், மோடி இசையமைப்பாளர்  இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கவிருப்பதாக பல்கலை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.