Published:Updated:

``பிரதமர் மோடி தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்குகிறார்!” - மகாராஷ்டிரா பாஜக தலைவர்

சந்திரகாந்த் பாட்டீல்

பிரதமர் மோடி தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்குவதாக மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

``பிரதமர் மோடி தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்குகிறார்!” - மகாராஷ்டிரா பாஜக தலைவர்

பிரதமர் மோடி தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்குவதாக மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
சந்திரகாந்த் பாட்டீல்

மகாராஷ்டிரா பாஜக-வினர் மும்பை மாநகராட்சித் தேர்தலுக்கு முழுவேகத்தில் தயாராகிவருகின்றனர். இந்தத் தேர்தலுக்கு பிரதமர் நரேந்திர மோடியை பிரசாரம் செய்ய அழைத்து வரத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் நடக்கவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு பேசிய மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், ``பிரதமர் நரேந்திர மோடி தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்குகிறார். நாட்டுக்காக தினமும் 22 மணி நேரம் உழைத்துக்கொண்டிருக்கிறார். இப்போது 24 மணி நேரமும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக உறங்காமல் இருந்து பயிற்சி எடுத்துவருகிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஒவ்வொரு நிமிடமும் பிரதமர் மோடி நாட்டுக்காக உழைக்கிறார். தற்போது பிரதமர் உறக்கத்தைத் தடுத்தால் 24 மணி நேரமும் உழைக்க முடியும் என்று கருதி அதற்காக முயன்றுவருகிறார். அவர் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்குவதில்லை. பிரதமர் மிகவும் திறமையாகச் செயல்படுகிறார். நாட்டில் எந்தக் கட்சியில் என்ன நடந்தாலும் அதை அறிந்துவிடுவார்” என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் வடக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ மரணமடைந்ததைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவசேனாவின் கோட்டையாகக் கருதப்படும் அங்கு மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. பாஜக, காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தலுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி ஏற்படும் என்று சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.