Published:Updated:

ஜனவரி 27-ல் விடுதலையாகிறார் சசிகலா?! - ஆர்.டி.ஐ கேள்விக்கு சிறை நிர்வாகம் பதில்

சசிகலா
சசிகலா

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலில் சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை. அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். `சிறையிலிருக்கும் சசிகலாவின் வருகை எப்போது?' - இந்த ஒற்றைக் கேள்விதான் அ.தி.மு.க வட்டாரங்களில் கடந்த சில மாதங்களாகவே ஹாட் டாபிக்காக இருக்கிறது. ஆகஸ்ட் 15-ம் ரிலீஸ் என்ற செய்தி முதலில் வெளியானது. எனினும், அந்தத் தகவலை சிறை நிர்வாகம் மறுத்தது.

 சசிகலா
சசிகலா

தொடர்ந்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன், ``செப்டம்பர் இறுதியில் சசிகலா விடுதலையாக வாய்ப்பிருக்கிறது’’ என்று சொல்ல, மீண்டும் பரபரப்பானது தமிழக அரசியல் களம்.

`விடுதலைக்கான விலையும்... விவகாரப் பின்னணியும்!' - சதுரங்க ஆட்டத்தில் சசிகலா

அவ்வப்போது இது போன்ற தகவல்கள் வருவதும், பின்னர் அது வதந்தி என்று ஆவதும் தொடர்கதை ஆகிவந்த நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலில் சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பில்லை. அடுத்த ஆண்டு ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜனவரி 27-ல் விடுதலையாகிறார் சசிகலா?! - ஆர்.டி.ஐ கேள்விக்கு சிறை நிர்வாகம் பதில்

பெங்களூரு நரசிம்மமூர்த்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு சிறை நிர்வாகம், பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா 2021, ஜனவரி 27-ல் விடுதலையாகிறார் என்றும், முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும், அபராதத் தொகையான ரூ.10 கோடியை அவர் நிச்சயம் செலுத்த வேண்டும், ஒருவேளை செலுத்தத் தவறினால், 2022, பிப்ரவரி மாதம் 27-ம் தேதிதான் விடுதலையாவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு