Published:Updated:

கைதிகள் முன் விடுதலைக்கான அரசாணை: இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கிறதா தமிழக அரசு..?

ஸ்டாலின்

முன் விடுதலை செய்யப்படுபவர்களில் இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கும்விதமாகத் தமிழக அரசின் அரசாணை இருக்கிறது என இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.

கைதிகள் முன் விடுதலைக்கான அரசாணை: இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கிறதா தமிழக அரசு..?

முன் விடுதலை செய்யப்படுபவர்களில் இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கும்விதமாகத் தமிழக அரசின் அரசாணை இருக்கிறது என இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.

Published:Updated:
ஸ்டாலின்

``அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிறையிலிருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள்" எனத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதையொட்டி தற்போது 700 பேரை விடுதலை செய்வதற்கான அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. இதில், பாலியல் வன்கொடுமை, பயங்கரவாதம், மத மோதல், சாதி மோதல், அரசுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள், ஊழல் வழக்கு, குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதை ஆய்வுசெய்யவும், இறுதிப் பட்டியலைத் தயாரிக்கவும் சிறப்புக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் அரசாணை
தமிழ்நாடு அரசின் அரசாணை

தமிழ்நாடு அரசாணையில் இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்படுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாகத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தற்போது வெளியிடப்பட்ட அரசாணைகளில் வாழ்நாள் சிறைவாசிகள் முன் விடுதலைக்கான நிபந்தனைகளில் வகுப்புவாத/மத மோதல்களில் ஈடுபட்டுக் கைதானவர்கள் முன் விடுதலை பெற இயலாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில், வாழ்நாள் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையில் காட்டப்பட்ட பாரபட்சங்கள்போல இல்லாமல் இந்த அரசு கருணையுடன் விடுதலை செய்யும் என்று நம்பியிருந்த வாழ்நாள் சிறைவாசிகள், அவர்களின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் மொத்த சமூகத்துக்கும் இந்த அரசாணை பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும், விரக்தியையும் அளித்திருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து, முதுகலைப் பட்டங்கள் வரை பெற்று, சீரிய முறையில் சீர்திருத்தம் பெற்றிருக்கும் நிலையில் விடுதலை செய்யப்படும் முஸ்லிம் சிறைவாசிகள் இனி எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா
த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் அரசின் இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். முன் விடுதலை செய்யப்படுபவர்களில் இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கும்விதமாகத் தமிழக அரசின் அரசாணை இருக்கிறதா என்ற விசாரணையில் இறங்கினோம்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், வழக்கறிஞர் இராஜீவ் காந்தியிடம் இந்தச் சர்ச்சை குறித்துப் பேசினோம். ``பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நீண்ட நாள்களாகச் சிறையிலிருப்பவர்கள் நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து, அதற்கான அரசாணையைப் பிறப்பித்திருக்கிறது. சிறைவாசிகள் நலன் குறித்து மாநில அரசு தனக்குரிய அதிகாரத்துக்குட்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. முத்தமிழறிஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோதும், இதேபோல பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதைப் பின்பற்றி தற்போது இருக்கும் தி.மு.க அரசும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. `பல்வேறு வழக்குகளில் நீண்டநாள் சிறையிலிருக்கும், குறிப்பாக, கோவைக் கலவரத்தின்போது கைதுசெய்யப்பட்ட இஸ்லாமியர்களையும் விடுதலை செய்ய வேண்டும். ஆனால், அரசாணை அதற்கு எதிராக இருக்கிறது. எனவே, அதை நீக்க வேண்டும்’ என இஸ்லாமியச் சகோதரர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

வழக்கறிஞர் இராஜீவ்காந்தி - தி.மு.க
வழக்கறிஞர் இராஜீவ்காந்தி - தி.மு.க

சிறைவாசிகள் குறித்து உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் ஒரு தீர்ப்பில், `நீண்ட நாள்களாகச் சிறையிலிருக்கும் கைதிகள் ஒட்டுமொத்தமாக விடுதலை செய்யப்படும்போது, மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், குறிப்பிட்ட சில வழக்குகளில் இருப்பவர்களை விடுதலை செய்யக் கூடாது’ என அறிவுரை வழங்கியிருக்கிறது. அதனடிப்படையில்தான் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``ஒட்டுமொத்தமாக நன்னடத்தையின் அடிப்படையில் சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்யும்போது நிச்சயம் சாதி, மத அடிப்படையில் அது நடக்காது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு அதற்கு இடமும் கொடுக்காது. இஸ்லாமியச் சகோதரர்களின் அச்சம் தேவையற்றது. அவர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து தி.மு.க அரசு உரியதைச் செய்யும். இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது தேவையில்லாத அச்சம்" என அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.

ஹாஜா கனி
ஹாஜா கனி

தமிழ்நாடு அரசின் அரசாணை குறித்து எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஹாஜா கனியிடம் பேசினோம். ``அரசாணையில் இருக்கும் சில விஷயங்கள் குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக்கொண்டவர் எல்லாம் நல்லதாகவே நடக்கும் என உறுதியளித்தார். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் என எதிர்பார்க்கிறோம்" எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism