Published:Updated:

பொது சிவில் சட்டம்: தனிநபர் மசோதா தாக்கல் செய்த பாஜக எம்.பி; குரல் வாக்கெடுப்பு நடத்திய சபாநாயகர்!

பா.ஜ.க எம்.பி கிரோடி லால் மீனா

இன்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், பா.ஜ.க எம்.பி கிரோடி லால் மீனா, பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார்.

பொது சிவில் சட்டம்: தனிநபர் மசோதா தாக்கல் செய்த பாஜக எம்.பி; குரல் வாக்கெடுப்பு நடத்திய சபாநாயகர்!

இன்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், பா.ஜ.க எம்.பி கிரோடி லால் மீனா, பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார்.

Published:Updated:
பா.ஜ.க எம்.பி கிரோடி லால் மீனா

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என பா.ஜ.க தலைவர்கள் பலரும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துவருகின்றனர். அது தொடர்பான வழக்கின் விசாரணைகளும் உச்ச நீதிமன்றத்தில் நடந்தவண்ணமே இருக்கின்றன. மேலும், தேர்தல் நெருங்கும் மாநிலங்களில், பா.ஜ.க தலைவர்கள் பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவோம் என வாக்குறுதிகளாகவே கூறிவருகின்றனர்.

பா.ஜ.க எம்.பி கிரோடி லால் மீனா
பா.ஜ.க எம்.பி கிரோடி லால் மீனா

இந்த நிலையில் குஜராத் தேர்தலில் பா.ஜ.க வரலாற்று வெற்றியை பதிவுசெய்த அடுத்த நாளே, பா.ஜ.க எம்.பி கிரோடி லால் மீனா என்பவர் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார். மாநிலங்களவையில் இன்று கிரோடி லால் மீனா தாக்கல் செய்த இந்த தனிநபர் மசோதாவுக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

இதில் எதிர்ப்புகளுக்கு எதிராக வாதிட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ``அரசியலமைப்பின் வழிகாட்டுதல் கொள்கைகளின் கீழுள்ள ஒரு பிரச்னையை எழுப்புவது என்பது உறுப்பினரின் சட்டப்பூர்வமான உரிமை. இந்த விஷயம் சபையில் விவாதிக்கப்படட்டும். இந்த நிலையில் அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துவது, மசோதாவை விமர்சிக்க முயல்வது தேவையற்றது" எனக் கூறினார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இதை எதிர்த்த கம்யூனிஸ்ட் எம்.பி ஜான் பிரிட்டாஸ், `பொது சிவில் சட்டம் அவசியமில்லை' என்று கூறிய சட்ட கமிஷனின் அறிக்கையைக் குறிப்பிட்டார். அதோடு தி.மு.க எம்.பி திருச்சி சிவாவும், ``பொது சிவில் சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது" என எதிர்த்தார். மேலும், பல எதிர்க்கட்சிகளும் இந்தத் தனிநபர் மசோதாவை எதிர்த்தன. அதைத் தொடர்ந்து சபாநாயகர் ஜக்தீப் தன்கர், தனிநபர் மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தினார். அதில் 23 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், 63 பேர் எதிராகவும் வாக்களித்ததன் மூலம் மசோதா தோற்கடிக்கப்பட்டது.