Published:Updated:

``பாஜக-வுக்கு அடிபணிய மறுப்பவர்கள் எல்லா வகையிலும் துன்புறுத்தப்படுகிறார்கள்!" - பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

கால்நடைத் தீவன வழக்கில், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, லாலு பிரசாத் யாதவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார் பிரியங்கா காந்தி.

லாலு பிரசாத் யாதவ் பீகாரின் முதல்வராக இருந்த காலகட்டத்தில், கால்நடைத் தீவனங்கள் வாங்குவதில் ஊழல் நடைபெற்றது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக அவருக்கு மொத்தமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில், டோர்தனா கருவூலத்திலிருந்து ரூ.139.35 கோடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 75 பேர் குற்றவாளிகள் என ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்

அதையடுத்து, பா.ஜ.க தங்களை எதிர்ப்பவர்களைக் குறிவைத்து நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அந்த வகையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``பா.ஜ. க-வுக்கு அடிபணிய மறுப்பவர்கள் எல்லா வகையிலும் துன்புறுத்தப்படுகிறார்கள். பா.ஜ.க-வின் அரசியலில் இது ஒரு முக்கிய அம்சம். இந்த அரசியல் காரணமாகத்தான் லாலு பிரசாத் யாதவ்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism