Published:Updated:

Viral Video: ஜந்தர் மந்தர் போராட்டம்; ராகுல் ஆதரவாளருக்கு காரில் லிஃப்ட் கொடுத்த பிரியங்கா!

பிரியங்கா காந்தி ( ட்விட்டர் )

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக ராகுல் காந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிந்த தொண்டர் ஒருவர் நடந்து சென்றிருக்கிறார்.

Viral Video: ஜந்தர் மந்தர் போராட்டம்; ராகுல் ஆதரவாளருக்கு காரில் லிஃப்ட் கொடுத்த பிரியங்கா!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக ராகுல் காந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிந்த தொண்டர் ஒருவர் நடந்து சென்றிருக்கிறார்.

Published:Updated:
பிரியங்கா காந்தி ( ட்விட்டர் )

நேஷனல் ஹெரால்டு நாளிதழை ராகுல், சோனியா காந்தி இருவருக்கும் சொந்தமான யங் இந்தியா கம்பெனியால் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இதையொட்டி, இந்த வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு மீண்டும் ஆஜரானார். பா.ஜ.க அரசு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக ராகுல் காந்திமீது வழக்கு தொடர்ந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக ராகுல் காந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிந்த தொண்டர் ஒருவர் நடந்து சென்றிருக்கிறார். அப்போது அந்த வழியாகப் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற பிரியங்கா காந்தி, அந்த காங்கிரஸ் தொண்டரை அழைத்து விசாரித்துவிட்டு தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு அவருக்கு லிஃப்ட் கொடுத்தார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism