Published:Updated:

கோவாவில் பிரியங்கா காந்தி... காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா! - நடந்தது என்ன?

பிரியங்கா காந்தி
News
பிரியங்கா காந்தி

``வரவிருக்கும் கோவா தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதில் ஆர்வம்காட்டவில்லை. அதன் சில தலைவர்களின் அணுகுமுறையால் ஆயத்த பணிகள்கூட தொடங்காத நிலையில் உள்ளன.”

பிரியங்கா காந்தியின் ஒரு நாள் கோவா பயணத்தையொட்டி, பல காங்கிரஸ் தலைவர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். சில உறுப்பினர்கள், அதிருப்தியாலும், மற்றவர்கள் கட்சியின் கூட்டணி குறித்த குழப்பம் காரணமாகவும் ராஜினாமா செய்துள்ளனர் .

பிரியங்கா காந்தி கோவா சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகிவரும் நிலையில், ஒத்த எண்ணம்கொண்ட கட்சிகளுடன் கூட்டணிவைப்பதில், கோவா காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் நிலவுவது மட்டுமின்றி பல கட்சி விலகலையும் சந்தித்துவருகிறது.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

கோவாவின் போர்வோரிம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களின் ஒரு குழு நேற்று காலை தங்களது பதிவிகளை ராஜினாமா செய்தது. சுயேச்சை எம்.எல்.ஏ ரோஹன் கவுண்டேவை ஆதரிக்கும் இந்தக் குழு, 2022 -ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் காங்கிரஸ் ஈடுபாடு காட்டவில்லை என்று கூறியிருக்கிறது.

"வரவிருக்கும் கோவா தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதில் ஆர்வம்காட்டவில்லை. அதன் சில தலைவர்களின் அணுகுமுறையால் ஆயத்த பணிகள்கூட தொடங்காத நிலையில் உள்ளன" என்று போர்வோரிமிலிருந்து குழுவை வழிநடத்திய முன்னாள் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர் குபேஷ் நாயக் செய்தியாளர்களிடம் கூறினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காங்கிரஸுக்கு மற்றொரு பின்னடைவாக, தெற்கு கோவாவைச் சேர்ந்த மூத்த தலைவர் மொரேனோ ரெபெலோவும் ராஜினாமா செய்திருக்கிறார்.

ரெபெலோவின் ராஜினாமா கடிதத்தில், கர்டோரிம் தொகுதியில் கட்சிக்கு எதிராகப் பணியாற்றியபோதிலும், அலெக்சோ ரெஜினால்டோவை வேட்பாளராகக் கட்சி அறிவித்ததைத் தொடர்ந்து அவர் வருத்தமடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

கோவா ஃபார்வர்ட் கட்சியுடன் (ஜி.எஃப்.பி), சட்டமன்றத் தேர்தலுக்கான புரிந்துணர்வின் தன்மை குறித்து காங்கிரஸில் கருத்து வேறுபாடுகள் தோன்றியதைத் தொடர்ந்துதான் ராஜினாமா தொடர் நிகழ்வானது.

கோவா காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் சிதம்பரம் கடந்த வியாழன், GFP காங்கிரஸுக்கு ஆதரவை மட்டுமே வழங்கியதாகவும், அதைக் கூட்டணி என்று கருத இயலாது என்றும் கூறினார்.

மறுபுறம், மூத்த காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ், ஜி.எஃப்.பி தலைவர் விஜய் சர்தேசாய் மற்றும் சோடங்கர் இடையே சனிக்கிழமை சந்திப்பை முன்மொழிந்திருக்கிறார்.

பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், "இதுவரை விஜய் சர்தேசாய் மட்டும்தான் டெல்லிக்கு வந்து, 'பாஜக-வைத் தோற்கடிக்க, காங்கிரஸ் கட்சிக்கு எனது கட்சி ஆதரவு தருகிறது' என்று கூறியிருந்தார். நாங்கள் ஏற்கிறோம் என்று ராகுல் காந்தியும் கூறினார். ஆதரவு, கூட்டணி குறித்த மற்ற அனைத்து விவரங்களும் பின்னர் ஆலோசிக்கப்படும்" என்றார்.

ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்

அவர் அறிக்கை வெளியிட்ட சில நிமிடங்களில், ராவ், "கோஃபர்வர்ட் பார்ட்டியின் தலைவர் ஸ்ரீ விஜய் சர்தேசாய், @INCGoa -ன் தலைவர் ஸ்ரீ கிரிஷ்கோவா மற்றும் பிறருடன் 11/12/21 அன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தில் ஒரு சந்திப்புக்கு அழைத்திருக்கிறேன்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.

இந்த அனைத்துக் குழப்பங்களுக்கு இடையில்தான் , பிரியங்கா காந்தியின் ஒரு நாள் கோவா பயணம் நடைபெற்றது.