Published:Updated:

நாகர்கோவில்: `துணை மேயர் ரூபத்தில் திமுக-வுக்கு சிக்கல்; காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பாஜக ஸ்கெட்ச்!

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம்

'காங்கிரஸ் மாநகரத் தலைவர் நவீன்குமாருக்கு துணை மேயர் பதவி கொடுக்க வேண்டும். காங்கிரஸுக்கு துணை மேயர் பதவி வழங்காமல் கூட்டணி தர்மத்தை மீறினால் வேறு முடிவு எடுக்கவேண்டியிருக்கும்' என காங்கிரஸ் தரப்பு புதிய குண்டைப் போட்டுள்ளது.

நாகர்கோவில்: `துணை மேயர் ரூபத்தில் திமுக-வுக்கு சிக்கல்; காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பாஜக ஸ்கெட்ச்!

'காங்கிரஸ் மாநகரத் தலைவர் நவீன்குமாருக்கு துணை மேயர் பதவி கொடுக்க வேண்டும். காங்கிரஸுக்கு துணை மேயர் பதவி வழங்காமல் கூட்டணி தர்மத்தை மீறினால் வேறு முடிவு எடுக்கவேண்டியிருக்கும்' என காங்கிரஸ் தரப்பு புதிய குண்டைப் போட்டுள்ளது.

Published:Updated:
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம்

நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில் தி.மு.க 24 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 7 இடங்களிலும், ம.தி.மு.க 1 இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன. பா.ஜ.க 11 இடங்களிலும், அ.தி.மு.க 7 இடங்களிலும், சுயேச்சை 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. மொத்தமுள்ள 52 வார்டுகளில் மேயர் தேர்வுக்கு 27 கவுன்சிலர்கள் போதும். தி.மு.க கூட்டணி 32 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. எனவே மேயர் தேர்தலில் எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டர்கள். எளிதில் மேயர் பதவியைக் கைப்பற்றிவிடலாம் என தி.மு.க-வினர் மகிழ்ச்சியில் இருந்தனர். நாகர்கோவில் மாநகர தி.மு.க செயலாளரான மகேஷ், மேயர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் தி.மு.க-விலும் பெரிய அளவில் மகேஷுக்கு எதிர்ப்பு இல்லை. எனவே தி.மு.க மேயர் வேட்பாளர் மகேஷ் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

பா.ஜ.க மீனாதேவ் , தி.மு.க மகேஷ்
பா.ஜ.க மீனாதேவ் , தி.மு.க மகேஷ்

இந்த நிலையில்தான் துணை மேயர் ரூபத்தில் தி.மு.க-வுக்குப் புதிய தலைவலி வந்துள்ளது. தி.மு.க தனியாக 24 வார்டில் வெற்றிபெற்றுள்ளதால் மேயர் பதவியைப் பிடிக்க மேலும் 3 கவுன்சிலர்கள் ஆதரவு போதும். எனவே துணை மேயர் பதவியையும் தி.மு.க-வில் ஒருவருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நான்கு முறை கவுன்சிலராக தேர்வுசெய்யப்பட்ட, கட்சியில் சீனியரான 9-வது வர்டு உறுப்பினர் ராமகிருஷ்ணனுக்குத் துணை மேயர் பதவி வழங்க தி.மு.க தரப்பு முடிவுசெய்துள்ளதாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேசமயம், 'தேர்தலுக்கு முன்பு கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது துணை மேயர் பதவியை காங்கிரஸுக்குத் தருவதாக தி.மு.க சொன்னது. எங்களுக்கு ஒதுக்கிய 13 வார்டுகளில் 7 வார்டுகளில் வென்றுள்ளோம். அதிலும் காங்கிரஸ் மாநகரத் தலைவர் நவீன்குமார் 44-வது வார்டில் மொத்தம் பதிவான 3,600 வாக்குகளில் 2,283 ஓட்டுகளை பெற்று எதிர்த்து நின்ற அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்துவிட்டார். எனவே நவீன்குமாருக்கு துணை மேயர் பதவி கொடுக்க வேண்டும். காங்கிரஸுக்குத் துணை மேயர் பதவி வழக்காமல் கூட்டணி தர்மத்தை மீறினால் வேறு முடிவு எடுக்க வேண்டியிருக்கும்' என காங்கிரஸ் தரப்பு புதிய குண்டைப் போட்டுள்ளது.

காங்கிரஸ் நவீன்குமார், தி.மு.க ராமகிருஷ்ணன்
காங்கிரஸ் நவீன்குமார், தி.மு.க ராமகிருஷ்ணன்

இதனால் உஷாரான பா.ஜ.க., உடனடியாக மேயர் தேர்தலுக்கு தயாராகிவிட்டது. அ.தி.மு.க., சுயேச்சைகளுடன், காங்கிரஸ் மற்றும் தி.மு.க-விலிருந்து சில கவுன்சிலர்களுக்கும் பிராக்கெட் போடத் தொடங்கிவிட்டதாம். இதனால் பா.ஜ.க சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வேட்பாளராக முன்னாள் நகராட்சி சேர்மன் மீனாதேவ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனால் எளிதில் வெற்றிபெறலாம் என இருந்த தி.மு.க-வுக்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism