Election bannerElection banner
Published:Updated:

விருத்தாச்சலம், சோளிங்கர், வந்தவாசி - பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் உத்தேசப் பட்டியல்!

பா.ம.க தேர்தல் அறிக்கை
பா.ம.க தேர்தல் அறிக்கை

கடைசியாக முதல்வரின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில். பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்ட 13 தொகுதிகளின் பட்டியல் நமக்குக் கிடைத்துள்ளது.

'மாற்றம், முன்னேற்றம்,அன்புமணி' என்கிற முழக்கத்துடன் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்துக் களம்கண்ட பாட்டாளி மக்கள் கட்சி இந்தமுறை அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க அங்கம் வகித்து வந்தாலும், 'சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து பொதுக்குழுவில் முடிவெடுப்போம், செயற்குழுவில் முடிவெடுப்போம்' என அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வந்தார் மருத்துவர் ராமதாஸ். வன்னியர்களுக்கான 20 சதவிகித தனி இட ஒதுக்கீட்டை நிபந்தனையாக முன்வைத்தார்.

பா.ம.க
பா.ம.க

அ.தி.மு.க சார்பில் நடத்தப்பட பிரசாரத் தொடக்கவிழாப் பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்தநிலையில், வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டு ஆணையின் மூலம் கூட்டணியை இறுதி செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து அந்தக் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

சோளிங்கரில் களமிறங்கும் அன்புமணி - சட்டமன்றத் தேர்தலுக்கு பா.ம.க ரெடி! #TNElection2021

எத்தனை தொகுதிகள் என்பதில் மிக விரைவாக ஏற்பட்ட உடன்பாடு எந்தெந்தத் தொகுதிகள் என்பதில் ஏற்படவில்லை. காரணம், பா.ம.க கேட்ட பல தொகுதிகளை பா.ஜ.கவும் கேட்டது. தவிர, பா.ம.க கூட்டணி ஆதரவோடு வெற்றி பெற்றுவிடலாம் என அ.தி.மு.க கணக்குப் போட்டு வைத்திருந்த பல தொகுதிகளையும் பா.ம.கவே கேட்டதால் தொடர்ந்து இழுபறியே நீடித்து வந்தது. கடைசியாக முதல்வரின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்ட 13 தொகுதிகளின் உத்தேசப் பட்டியல் நமக்குக் கிடைத்துள்ளது. அதை இங்கே பகிர்கிறோம்.

அ.தி.மு.க., பா.ம.க ஒப்பந்தம்
அ.தி.மு.க., பா.ம.க ஒப்பந்தம்

1. பூந்தமல்லி

2. ஆத்தூர் ( திண்டுக்கல்)

3. சோளிங்கர்

4. வந்தவாசி

5.நெய்வேலி

6. செஞ்சி

7 . மேட்டூர்

8. பென்னாகரம்

9. மயிலாடுதுறை

10.ஜெயங்கொண்டம்

11. சங்கராபுரம்

12. சங்ககிரி

13. விருத்தாச்சலம்.

முழுப் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு