Published:Updated:

'தமிழில் பொறியியல் படிப்புகள் ; மாணவர்கள் மீதான அக்கறையா, கல்லூரிகளுக்கு விரிக்கும் வலையா?'

பொறியியல் கல்லூரி

பிராந்திய மொழிகளில் பாடம் கற்கவும், கற்பிக்கவும் கல்லூரிகளுக்குக் கட்டாயம் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'தமிழில் பொறியியல் படிப்புகள் ; மாணவர்கள் மீதான அக்கறையா, கல்லூரிகளுக்கு விரிக்கும் வலையா?'

பிராந்திய மொழிகளில் பாடம் கற்கவும், கற்பிக்கவும் கல்லூரிகளுக்குக் கட்டாயம் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
பொறியியல் கல்லூரி

தமிழ் உள்ளிட்ட எட்டு பிராந்திய மொழிகளில் பொறியியல் படிப்புகளைப் பயிற்றுவிக்க கல்லுாரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவு, வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்து பொறியியல் சேரும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஒருபுறம் வரவேற்கப்பட்டாலும், இது கல்லூரிகளை என்.பி.ஏ எனப்படும் தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெறச் செய்வதற்கான முயற்சி மட்டுமே என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

அண்ணா பல்கலைக் கழகம்!
அண்ணா பல்கலைக் கழகம்!

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் மற்றும் கம்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஐந்து பிரிவுகளுக்கு தமிழ், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, குஜராத்தி ஆகிய எட்டு பிராந்திய மொழிகளில் இளநிலை பொறியியல் கல்விக்கான மொழிபெயர்ப்புகள் தயாராக உள்ளன என்றும் ஏ.ஐ.சி.டி.இ தெரிவித்துள்ளது. இது தவிர மேலும் 11 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்களை மொழிபெயர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது. பிராந்திய மொழிகளில் பாடம் கற்கவும், கற்பிக்கவும் கல்லூரிகளுக்குக் கட்டாயம் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஒரு சில அரசு கல்லூரிகளில், கடந்த 2010-11-ம் ஆண்டு முதல், சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகள் தமிழ்வழியில் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த நிலையில், தற்போது, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு எந்தளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்? தனியார் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பாலமுருகனிடம் பேசினோம்,

''பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. ஆங்கில வழியில் மட்டுமல்லாது தாய்மொழியிலும் படிக்கும் வாய்ப்பு இருந்தால் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தலாம் என ஏ.ஐ.சி.டி.இ நினைத்திருக்கலாம். குறிப்பாக, பொறியியல் கல்லூரிகள் அதிகமாக உள்ள மாநில மொழிகளுக்கு முதற்கட்டமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 தனியார் பொறியியல் கல்லூரிகள்
தனியார் பொறியியல் கல்லூரிகள்

ஆனால், தமிழில் பாடம் கற்பிக்க விரும்பும் கல்லூரிகள் என்.பி.ஏ., எனப்படும், தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லுாரியாக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிப் பார்த்தால் தமிழகத்தில் பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகள் என்.பி.ஏ அங்கீகாரம் பெறாத கல்லூரிகளாகத்தான் இருக்கின்றன. அதனால், இது மாணவர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட திட்டமாக நான் பார்க்கவில்லை. மாறாக, கல்லூரிகளை என்.பி.ஏ அங்கீகாரம் வாங்கச் செய்வதற்கான முயற்சியாக இருக்குமோ என சந்தேகம் எழுகிறது. காரணம், என்.பி.ஏ அங்கீகாரம் பெறுவதற்கு ஒரு துறைக்கு ( எ.கா ; சிவில்) அதிகாரபூர்வமாகவே லட்சக்கணக்கில் அரசாங்கத்துக்குப் (யூ.ஜி.சி) பணம் செலுத்த வேண்டும். திரைமறைவிலும் பல லட்சங்களைக் கைமாற்ற வேண்டியிருக்கும். இந்த சுமைகளை மீண்டும் மாணவர்கள் மீதுதான் கல்லூரிகள் சுமத்துவார்கள்'' என்றவர் தொடர்ந்து

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''இது ஒருபுறம் இருந்தாலும், தமிழ் வழியில் படிப்பது நல்ல விஷயம்தான். மாணவர்கள் புரிந்து படிப்பதற்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். தற்போதே கல்லூரிகளில் தமிழில் பாடம் நடத்தும்போதுதான் பெரும்பாலான மாணவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஏன் ஆங்கில வழியில் பள்ளியில் படித்த மாணவர்களுக்கும் கூட தமிழ் வழியில் பாடம் நடத்துவதையே விரும்புகின்றனர். தமிழிலேயே பாடப் புத்தகங்களும் தமிழிலேயே தேர்வு எழுத முடியும் என்பதும் வரவேற்கத்தக்க விஷயம்தான். ஆனால்,தமிழ்நாட்டில் ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளில் தமிழ்வழியில் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழகத்தில் தமிழ்வழியில் படித்தால் அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், மாணவர்கள் யாரும் அவ்வளவு ஆர்வமாக பொறியியல் படிப்புகளில் சேர்வதில்லை. காரணம், பொறியியல் பட்டதாரிகளுக்கு, எம்.என்.சி கம்பெனிகள்தான் பெரும்பாலும் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. அவர்களின் அலுவல் மொழி ஆங்கிலம்தான். தமிழ் வழியில் படித்தால் அவர்கள் வேலைக்கு எடுத்துக்கொள்வார்களா என்கிற பயம் மாணவர்களுக்கு இருக்கிறது'' என்கிறார் அவர்.

எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியம்
எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியம்

இதற்கு விடையளிக்கும் விதமாக, ஐ.டி துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியம் பேசும்போது,

''நான் பள்ளியில் தமிழ் வழியில் படித்துவிட்டு, பொறியியல் படிப்புகளை ஆங்கிலத்தில் படிக்கும்போது மிகவும் சிரமப்பட்டேன். டிக்ஷனரி உதவியுடன் ஒவ்வொன்றையும் தேடிப் பிடித்துப் படிக்க அதிக காலமும் எடுத்துக்கொண்டது. பிராந்திய மொழியில் படிக்கும்போது மாணவர்களுக்கு பாடம் குறித்து தெளிவு இன்னும் அதிகமாகும் என்றே நான் நினைக்கிறேன்.

நிறுவனங்கள் தமிழ் வழியில் படித்து வருவதால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பயப்படத் தேவையில்லை. அவர்களுக்கு நாம் சப்ஜெக்டில் திறமையாளராக இருக்கிறோமா என்பதுதான் முக்கியம். அதேவேளை, தமிழில் நினைப்பதை ஆங்கிலத்தில் சொல்ல அதாவது கம்யூனிகேஷனுக்கு ஆங்கில மொழிப் புலமையும் மாணவர்களுக்குக் கண்டிப்பாக தேவை. பாடங்களை தமிழ் வழியிலும் படித்தாலும் தனியாக ஆங்கில வகுப்புகளை கல்லூரிகள் நடத்தலாம். உதாரணமாக ஒரு சில செமஸ்டர்கள் மட்டும் இங்கிலீஷ் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் ஒரு பாடமாக இருக்கிறது. அது நான்காண்டுகளுக்கும் விரிவுபடுத்தலாம். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்குக் கூடுதல் சிரத்தை எடுத்துக் கல்லூரிகள் ஆங்கிலத்தைக் கற்றுக்கொடுக்கலாம்'' என்கிறார் அவர்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

பா.ஜ.கவின் தேசிய மகளிரணிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனிடம் பேசினோம்,

''தாய்மொழி வழியிலான கல்வியை புதிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது, கட்டாயப்படுத்துகிறது. அந்தவகையில், தொழிற்கல்வியையும் பிராந்திய மொழியிலேயே படிப்பதற்கான ஊக்குவிப்பாக மட்டுமே நாம் இந்த அறிவிப்பைப் பார்க்கவேண்டும். பிராந்திய மொழிகளுக்கு சம அந்தஸ்தும் உரிமையும் கிடைக்கும்போது அந்த மொழிகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மற்றபடி, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கோ வேறு எந்த உள்நோக்கமோ இந்த அறிவிப்பில் இல்லை'' என்கிறார் ஆணித்தரமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism