Published:Updated:

``சிறுபான்மையினரைப் பாதுகாப்பது மதவாத வன்முறைகளைத் தவிர்க்க உதவும்!" - வங்காளதேச அமைச்சர் திபு மோனி

வங்காளதேச கல்வியமைச்சர் திபு மோனி

பெங்களூரில் இந்தியா ஃபவுண்டேஷன் குழு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட வங்காளதேச கல்வியமைச்சர் திபு மோனி, ``சிறுபான்மையினரைப் பாதுகாப்பது மதவெறி வன்முறையைத் தவிர்க்க உதவும்" எனக் கூறினார்.

``சிறுபான்மையினரைப் பாதுகாப்பது மதவாத வன்முறைகளைத் தவிர்க்க உதவும்!" - வங்காளதேச அமைச்சர் திபு மோனி

பெங்களூரில் இந்தியா ஃபவுண்டேஷன் குழு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட வங்காளதேச கல்வியமைச்சர் திபு மோனி, ``சிறுபான்மையினரைப் பாதுகாப்பது மதவெறி வன்முறையைத் தவிர்க்க உதவும்" எனக் கூறினார்.

Published:Updated:
வங்காளதேச கல்வியமைச்சர் திபு மோனி

கர்நாடக மாநிலம், பெங்களூரில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நெருக்கமான இந்தியா ஃபவுண்டேஷன், சனிக்கிழமையன்று `இந்தியா 2047' என்ற தலைப்பில் அமர்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் வங்காளதேச கல்வியமைச்சர் திபு மோனி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அப்போது கூட்டத்தில் பேசிய திபு மோனி, ``உலகளாவிய சக்திகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கவேண்டுமெனில், அரசியலமைப்பில் கூறப்பட்டிருக்கும் கனவுகளை இந்தியா நனவாக்க வேண்டும். குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவற்றுக்கு உத்தரவாதம் அளிப்பதன் மூலம் இந்தியா தன் குடிகளின் திறமைகளை வெளிகொண்டுவருவதற்கான ஒரு தளத்தை அமைக்க முடியும். மேலும் இது, குறிப்பாகப் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் அனைத்து சமூகத்திலிருக்கும் பெண்களுக்குமான தளமாக இருக்கும்.

வங்காளதேச கல்வியமைச்சர் திபு மோனி
வங்காளதேச கல்வியமைச்சர் திபு மோனி

மேலும், இந்தியாவுக்கே உரித்தான சமூக அடுக்குகள், சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரை இழப்பது மட்டுமல்லாமல் பிரித்தாளும் கொள்கைகளையும், அணுகுமுறைகளையும் அனுமதிக்கும். எனவே மத சுதந்திரம் மற்றும் மத விவகாரங்களை நிர்வகிக்கக்கூடிய சுதந்திரம் குறித்த அரசியலமைப்பின் விதிகளைப் பக்கச்சார்பற்ற முறையில் பயன்படுத்துவதன் மூலம் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தி, சமுதாயத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும். மேலும், சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பதென்பது, மதவாத வன்முறைகளைத் தவிர்க்க உதவும். அனைத்து நாடுகளுக்கும் இது பொருந்தும்" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism