Published:Updated:

இலங்கையில் ராஜபக்சே வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைப்பு - கலவரத்தில் ஆளுங்கட்சி எம்.பி படுகொலை?

ராஜபக்சே வீட்டுக்குத் தீவைப்பு

இலங்கையில் போராட்டக்காரர்கள் பிரதமர் பதவியிலிருந்து விலகிய மகிந்த ராஜபக்சேயின் வீட்டுக்குத் தீவைத்தனர்.

இலங்கையில் ராஜபக்சே வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைப்பு - கலவரத்தில் ஆளுங்கட்சி எம்.பி படுகொலை?

இலங்கையில் போராட்டக்காரர்கள் பிரதமர் பதவியிலிருந்து விலகிய மகிந்த ராஜபக்சேயின் வீட்டுக்குத் தீவைத்தனர்.

Published:Updated:
ராஜபக்சே வீட்டுக்குத் தீவைப்பு

பின்னர் கட்டடத்தைச் சோதனை செய்து பார்த்தபோது எம்.பி-யும் அவருடைய பாதுகாவலரும் இறந்துகிடந்தனர். கலவரத்தில் மொத்தம் மூன்று பேர் கொலைசெய்யப்பட்டனர். 150-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இலங்கை எம்.பி சனத், முன்னாள் அமைச்சர் ஜான்சன் ஆகியோரது வீடுகளும் தீவைக்கப்பட்டன. நாட்டில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று இலங்கை பார் கவுன்சில் கேட்டுக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து பதற்றம் நிலவிவருவதால் அதிபர் கோதபய ராஜபக்சேயும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை பல மடங்கு அதிகரித்து, மக்களின் வாழ்க்கைத்தரம் கேள்விக்குறியாகியிருக்கிறது. எரிபொருள், மருந்துப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்ய அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லை. இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கையை ஆண்ட மகிந்த ராஜபக்சேவும், அவருடைய சகோதரர் கோத்தபய ராஜபக்சேயும்தான் காரணம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். இதையடுத்து இருவரும் பதவி விலக வேண்டும் என்று கோரி கடந்த ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்று மகிந்த ராஜபக்சே தொடர்ந்து பிடிவாதம் பிடித்துவந்தார். இதனால் கொழும்பில் அதிபர் அலுவலகத்துக்கு எதிரே அரசுக்கு எதிரானவர்களும், ஆதரவானவர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

பற்றி எரியும் தீ
பற்றி எரியும் தீ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதில் 130-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நிலைமை கைமீறிச் சென்றதால் ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தவுடன் அவரின் ஆதரவாளர்கள் அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதிபர் வீட்டுக்குத் தீவைப்பு

இந்தக் கலவரத்தால் போராட்டக்காரர்கள் முன்னாள் அமைச்சர்கள் பலரின் வீடுகளைத் தாக்கியதோடு அவற்றுக்குத் தீவைத்தனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். போராட்டக்காரர்கள் போலீஸாரின் வாகனங்களையும் தாக்கினர். போராட்டக்காரர்கள் பதவி விலகிய ராஜபக்சேயின் பூர்வீக இல்லத்துக்குத் தீவைத்தனர். ஹெம்பதோடா என்ற இடத்திலுள்ள மேதமுலாவில் இருக்கும் ராஜபக்சே மற்றும் அவரின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேயின் வீடுகளுக்குத் தீவைத்தனர். இதில் வீடு தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. ராஜபக்சே கிராமத்திலிருந்து பஸ்களில் நூற்றுக்கணக்கானோரை கிராமத்தில் கொண்டு வந்து தனது வீட்டுக்கு முன்பு நிறுத்தினார். அவர்கள் ராஜபக்சேயின் வீட்டுக்கு எதிரில் போராட்டக்காரர்கள் போட்டிருந்த தற்காலிகக் குடில்களை அப்புறப்படுத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் ராஜபக்சே வீட்டுக்குத் தீவைத்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எம்.பி படுகொலை

வட மேற்கு இலங்கையில் உள்ள நித்தம்புவா என்ற இடத்தில் நடந்த கலவரத்தில் ஆளுங்கட்சி எம்.பி-யான அமரகீர்த்தியும், அவரின் பாதுகாவலரும் படுகொலை செய்யப்பட்டனர். இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், ``அமரகீர்த்தியின் காரிலிருந்து போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்” என்று தெரிவித்தனர். இதனால் போராட்டக்காரர்கள் எம்.பி-யின் காரை கவிழ்த்தனர். காரிலிருந்து இறங்கி தப்பி ஓடிய அமரகீர்த்தி அருகில் உள்ள ஒரு கட்டடத்தில் தஞ்சம் புகுந்தார். அந்தக் கட்டடத்தை பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் சுற்றிவளைத்தனர். இதனால் அமரகீர்த்தி தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் கட்டடத்தைச் சோதனை செய்து பார்த்த போது எம்.பி-யும், அவருடைய பாதுகாவலரும் இறந்துகிடந்தனர். கலவரத்தில் மொத்தம் மூன்று பேர் கொலைசெய்யப்பட்டனர். 150-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இலங்கை எம்.பி சனத், முன்னாள் அமைச்சர் ஜான்சன் ஆகியோரின் வீடுகளும் தீவைக்கப்பட்டன. நாட்டில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று இலங்கை பார் கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்ந்து பதற்றம் நிலவிவருவதால் அதிபர் கோதபய ராஜபக்சேயும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism