Election bannerElection banner
Published:Updated:

புதுச்சேரி: `அங்கன்வாடிக் குழந்தைகளுக்கு இனி வாரம் 3 முட்டைகள்!’ - ஆளுநர் தமிழிசை உத்தரவு

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களிலும் அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு வாரத்துக்கு மூன்று முட்டைகள் வழங்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டிருக்கிறார்.

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அந்தப் பொறுப்பு, தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்குக் கூடுதலாக வழங்கப்பட்டது.

அங்கன்வாடிக் குழந்தைகள்
அங்கன்வாடிக் குழந்தைகள்

ஆளுநராகப் பொறுப்பேற்றது முதல் அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு செய்துவரும் தமிழிசை, பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறார்.

அந்த வகையில், புதுச்சேரி அரசு அங்கன்வாடிக் குழந்தைகளின் புரதச்சத்து தேவையை பூர்த்தி செய்ய வழங்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரித்து உத்தரவிட்டிருக்கிறார். இதுவரை வாரந்தோறும் ஒரு முட்டை வழங்கப்பட்டுவந்தது. இனி வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அதற்கான அரசு செலவீனங்களுக்கும் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

புதுச்சேரி: `தடுப்புகள் இனி இருக்காது; என் பாணியே தனி!’ - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

இதன் மூலம் 28,846 குழந்தைகள் பயன்பெறுவர். அதேபோல ஆண்டொன்றுக்கு சுமார் 1.68 கோடி ரூபாய் புதுச்சேரி அரசுக்கு கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்படிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு