Published:Updated:

``தேசிய ஜனநாயகக் கூட்டணியால் ஏமாற்றப்பட்டோம்!” - குமுறும் புதுச்சேரி அதிமுக

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

”திமுகவின் ’பி’ டீமாக இருந்துகொண்டு அதிமுக-வையே அழிக்க நினைக்கும் ஓ.பி.எஸ் எண்ணம் என்றைக்கும் நிறைவேறாது” - புதுச்சேரி அதிமுக

``தேசிய ஜனநாயகக் கூட்டணியால் ஏமாற்றப்பட்டோம்!” - குமுறும் புதுச்சேரி அதிமுக

”திமுகவின் ’பி’ டீமாக இருந்துகொண்டு அதிமுக-வையே அழிக்க நினைக்கும் ஓ.பி.எஸ் எண்ணம் என்றைக்கும் நிறைவேறாது” - புதுச்சேரி அதிமுக

Published:Updated:
இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

அ.தி.மு.க நிறுவனர், எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், புதுச்சேரி அ.தி.மு.க சார்பில் அரியாங்குப்பம் சட்டமன்றத் தொகுதியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாநில அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன், ”தி.மு.க-வின் ’பி’ டீமாக இருந்துகொண்டு அ.தி.மு.க-வையே அழிக்க நினைக்கும் ஓ.பி.எஸ்-ஸின் எண்ணம் என்றைக்கும் நிறைவேறாது. தற்போது நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் சம்பந்தமாக ஓ.பி.எஸ், பேட்டியளிக்கும்போது தேர்தலில் நிற்போம் என்றும், பா.ஜ.க ஆதரவு கேட்டால் ஆதரவு அளிப்போம் என்கிறார். தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் நிற்போம் அல்லது சுயேட்சை சின்னத்திலும் நிற்போம் என்கிறார். அதில் ஒருபடி மேலே சென்று இரட்டை இலைச் சின்னத்தை முடக்கும் எண்ணம் இல்லை.

புதுச்சேரி  - அதிமுக
புதுச்சேரி - அதிமுக

முடக்கப்படும் சூழல் வந்தால் எடப்பாடியாருடன் இணைந்து செயல்படவும் தயார் என்கிறார். இவரின் பேச்சில் எந்தத் தெளிவும் இல்லை. தி.மு.க தலைவர் ஸ்டாலின் எண்ணத்துக்கு ஏற்ப இடைத்தேர்தல் சம்பந்தமாகக் கருத்தை தெரிவித்திருக்கிறார். நடைபெற இருக்கின்ற இடைத்தேர்தலில் கழகம் இரட்டை இலையில் நிச்சயம் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பைப் பெறும். புதுச்சேரியில் தி.மு.க என்று ஒரு கட்சி இருக்கிறது. நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை தனது சதித் திட்டத்தின் மூலம் தி.மு.க தடுத்து நிறுத்தியது. உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிரான கட்சி தி.மு.க என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதே போன்று புதுச்சேரி மாநில மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மாநில அந்தஸ்து புரட்சித் தலைவி அம்மா காலத்திலேயே அ.தி.மு.க-வால் வலியுறுத்தப்பட்டது.

தற்போது கூட எடப்பாடியார் அனுமதியோடு, மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி ஒருநாள் முழு பந்த் போராட்டத்தை நாம் நடத்தினோம். அந்த பந்த் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த தி.மு.க பலரையும் தூண்டிவிட்டது. உச்சக்கட்டமாக காவல்துறை டி.ஜி.பி-யை நேரில் சந்தித்து எங்கள் மீது புகார் அளித்தது. ஆனாலும், பந்த் போராட்டத்துக்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வெற்றி பெற வைத்தனர். ஒரு அ.தி.மு.க தொண்டனின் செயல்பாட்டைக்கூட தி.மு.க-வால் தடுத்து நிறுத்திட முடியாது. மாநில அந்தஸ்து பிரச்னையில் தி.மு.க-வின் இரட்டை வேடம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது.

கூட்டணி அடிப்படையில் அரியாங்குப்பம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு விடப்பட்டதே தவிர, அவர்களுக்கு குத்தகைக்கு விட்டுவிடவில்லை. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் நிச்சயமாக அ.தி.மு.க போட்டியிடும்.

புதுச்சேரியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியால் அ.தி.மு.க ஏமாற்றப்பட்டது. இனிமேல் ஏமாறமாட்டோம். நான்கு எம்.எல்.ஏ-க்கள் இருந்தோம். ஆனால், நமக்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டது. தலைமைக்குக் கட்டுப்பட்டு நடந்தோம். இனிமேல் வருகின்ற தேர்தலில் எந்தக் கூட்டணியாக இருந்தாலும் அ.தி.மு.க ஏமாறாது. அ.தி.மு.க தனது உரிமையை நிலைநாட்டும், அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடியிடம் நாம் வெற்றிபெறுவதற்கு சாதகமாக இருக்கிற தொகுதிகளின் பட்டியலை அளிப்போம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் பத்து தொகுதிகளுக்கு மேல் அ.தி.மு.க நிச்சயமாக போட்டியிடும். தமிழகத்தில் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சி மலரும்போது, புதுச்சேரியிலும் அ.தி.மு.க ஆட்சி மலரும்” என்றார்.