Published:Updated:

``உள்ளாட்சித் தேர்தலை நிறுத்திவிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்!" – புதுச்சேரி திமுக மீது பாயும் அதிமுக

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்

``எம்.எல்.ஏ-க்களின் அதிகாரங்கள் குறையும் என்ற காரணத்தினால்தான் நீதிமன்றத்தின் மூலம் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தியிருக்கிறது தி.மு.க” – புதுச்சேரி அ.தி.மு.க

``உள்ளாட்சித் தேர்தலை நிறுத்திவிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்!" – புதுச்சேரி திமுக மீது பாயும் அதிமுக

``எம்.எல்.ஏ-க்களின் அதிகாரங்கள் குறையும் என்ற காரணத்தினால்தான் நீதிமன்றத்தின் மூலம் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தியிருக்கிறது தி.மு.க” – புதுச்சேரி அ.தி.மு.க

Published:Updated:
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்

புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் இன்று வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில், ``உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதிலும், உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு சம்பந்தமாகவும் தி.மு.க தொடர்ந்து இரட்டை வேடம் போடுகிறது. புதுச்சேரியில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை தமிழக தி.மு.க ஆட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது. தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாத நிலையில், புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தி.மு.க.

புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க 
செயலாளர் அன்பழகன்
புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன்

அந்த வழக்கால்தான் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. அதை மூடி மறைக்கும் விதமாக, உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு இருக்கிறதா இல்லையா என்பதை அரசு அறிவித்துவிட்டு, தேர்தலை நடத்த வேண்டுமென இப்போது தி.மு.க கூறுகிறது. புதுச்சேரியில் சாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில் இட ஒதுக்கீடு என்ற போலி காரணத்தை காட்டி தேர்தலை நிறுத்தி வைத்த தி.மு.க, தற்போது இட ஒதுக்கீடு குறித்து கேட்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் அட்டவணை இனத்தவர்களுக்கு அரசின் குறைந்தபட்ச அதிகாரங்கள் கிடைத்திருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகாரம் குறையும் என்ற ஒரே நோக்கத்திற்காக சுயநலமிக்க சில சட்டமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதியாக, நீதிமன்றத்தின் மூலம் தேர்தலை நிறுத்தியுள்ள தி.மு.க-வின் செயலை மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். புதுச்சேரி மாநிலத்தில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை மக்கள் தி.மு.க-வுக்கு வழங்கியிருக்கின்றனர். ஆனால் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க, பா.ஜ.க-வைச் சேர்ந்த சபாநாயகர் மீது தனிப்பட்ட வெறுப்பு அரசியலை நடத்துவது சரியானது அல்ல.

புதுச்சேரி தி.மு.க எம்.எல்.ஏ சிவா
புதுச்சேரி தி.மு.க எம்.எல்.ஏ சிவா

புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுக்க இருப்பதாக தி.மு.க அறிவித்துள்ளது. சட்டப்பேரவை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பு, சட்டமன்ற நடத்தை விதிகளை தி.மு.க புரிந்து கொள்வது நல்லது. சட்டமன்ற நடத்தை விதி அத்தியாயம் 18 விதி எண் 753 பிரிவு 7 உட்பிரிவு 2-ன் கீழ் சட்டப்பேரவை தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் 14 நாள்களுக்கு முன்பு வழங்கப்பட வேண்டும் கூறப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் வருகின்ற 30-ம் தேதி ஒரே ஒருநாள் மட்டும் நடைபெறவிருக்கும் சட்டமன்ற நிகழ்வுகளில் தி.மு.க-வின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்பட வாய்ப்பில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் வெற்று அறிக்கை விடுவதைத் தவிர்த்து எதிர்க்கட்சியின் ஆக்கப்பூர்வமான பணியை செய்ய வேண்டும் என தி.மு.க-வை கேட்டுக்கொள்கிறேன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிப்டிக்கில் பணிபுரிந்த தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்த துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்களுக்கும், முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism