Published:Updated:

புதுச்சேரி: ``அரசு உயரதிகாரிகள் சொத்துக் கணக்குகளை விசாரணை செய்ய வேண்டும்!" - பாஜக தலைவர் சாமிநாதன்

சாமிநாதன்

"புதுச்சேரியில் நீண்டகாலமாகப் பணிபுரியும் அரசு உயரதிகாரிகளின் வங்கிக் கணக்குகள், சொத்துகளின்மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை வைப்போம்" - பாஜக தலைவர் சாமிநாதன்

Published:Updated:

புதுச்சேரி: ``அரசு உயரதிகாரிகள் சொத்துக் கணக்குகளை விசாரணை செய்ய வேண்டும்!" - பாஜக தலைவர் சாமிநாதன்

"புதுச்சேரியில் நீண்டகாலமாகப் பணிபுரியும் அரசு உயரதிகாரிகளின் வங்கிக் கணக்குகள், சொத்துகளின்மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிக்கை வைப்போம்" - பாஜக தலைவர் சாமிநாதன்

சாமிநாதன்

புதுச்சேரி பா.ஜ.க தலைவர் சாமிநாதன் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் நேற்றைய தினம் தமிழ்க் கடவுள் முருகனின் விழாவான தைப்பூச தினம் கொண்டாடப்பட்டது. மேலும், திரு இராமலிங்க அடிகளார் முக்தியடைந்த தைப்பூசத் தினத்தன்று ஜோதி வடிவாகிய வள்ளலாரை வணங்கிவருகின்றனர்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

இந்தத் தைப்பூச திருநாளன்று மாநிலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்றைய தினம் அனைத்து இறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. புதுச்சேரி அரசு அதிகாரிகள் நேற்றைய தினம் ரோந்து நடவடிக்கையை மேற்கொள்ளாமல், தங்கள் பணியை சரிவர செய்யாமல் அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டதே அதற்கு முக்கியக் காரணமாகும்.

மத்திய அரசினால் கொண்டுவரப்படுகின்ற மாநிலத்துக்கான நலத்திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படாமலும், திட்டத்துக்கான நிதியைச் செலவு செய்யாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்புவதையும் அதிகாரிகள் வாடிக்கையாகக்கொண்டிருக்கின்றனர். மேலும், புதுச்சேரி மாநிலத்தில் நீண்டகாலமாக ஒரே துறையில் பணிபுரியும் அதிகாரிகளை மத்திய அரசுக்கு உட்பட்ட நாட்டின் பிற பகுதியின் UT பகுதிகளுக்கு, சுழற்சி முறையில் இடமாற்றம் செய்ய மத்திய அரசை அணுகி வலியுறுத்துவோம்.

தேசிய ஜனநாயக அரசின் செயல்பாடுகளைத் தொடர்ந்து முடக்கும்விதமாக செயல்பட்டுவருகின்றனர். இதை பா.ஜ.க வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, அவர்கள்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், மத்திய தணிக்கைக் குழுவின் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் நீண்டகாலமாகப் பணிபுரியும் அரசு உயரதிகாரிகளின் வங்கிக் கணக்குகள், சொத்துகளின்மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புதுச்சேரி பா.ஜ.க சார்பாக கோரிக்கை வைக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.