Published:Updated:

புதுச்சேரி: `ரூ.10,100 கோடி; தமிழில் கவர்னர் உரை!’ – தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பட்ஜெட்

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் இன்று காலை தொடங்கவிருக்கும் நிலையில், துணை சபாநாயகர் பதவியேற்பும் நடக்கவிருக்கிறது.

புதுச்சேரியில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. அதையடுத்து முதல்வரும், நிதித்துறை அமைச்சருமான ரங்கசாமி 2020-2021 ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை இன்று பேரவையில் தாக்கல் செய்யவிருக்கிறார். முன்னதாக புதுச்சேரி அரசு சார்பில் ரூ.10,100 கோடிக்குத் தயார் செய்து அனுப்பப்பட்ட திட்ட வரையறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதனடிப்படையில் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்கு கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முதலாக கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் கவர்னர் உரையை வாசிக்கவிருக்கிறார். அதைத் தொடர்ந்து 11:15 மணிக்கு துணை சபாநாயகர் தேர்தலும், பதவியேற்பும் நடைபெறவிருக்கின்றன. துணை சபாநாயகர் பதவிக்கு நெட்டப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ-வான ராஜவேலுவை என்.ஆர்.காங்கிரஸ் முன்னிறுத்தியிருக்கிறது. இந்தப் பதவிக்கு வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் இவரே போட்டியின்றி தேர்வு செய்யப்படவிருக்கிறார். அதையடுத்து மாலை 4:30 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2021-21 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வார விடுமுறை நாள்களைத் தவிர்த்து ஏழு நாள்கள் நடைபெறும் என்று சபாநாயகர் தலைமையிலான சட்டப்பேரவை அலுவல்குழு தெரிவித்திருக்கிறது.

தமிழக வேளாண் பட்ஜெட் 2021-22 -  
பசுமை விகடன் எடுத்த முயற்சி... விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி!
அடுத்த கட்டுரைக்கு