Published:Updated:

`புதுச்சேரி முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள்!’ - முதல்வர் ரங்கசாமியின் சுதந்திர தின உரை ஹைலைட்ஸ்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

”புதுச்சேரியின் பாரம்பர்யமிக்க ஏ.எஃப்.டி தொழிற்சாலையை தனியார் பங்களிப்புடன் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” -புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

`புதுச்சேரி முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள்!’ - முதல்வர் ரங்கசாமியின் சுதந்திர தின உரை ஹைலைட்ஸ்

”புதுச்சேரியின் பாரம்பர்யமிக்க ஏ.எஃப்.டி தொழிற்சாலையை தனியார் பங்களிப்புடன் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” -புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

Published:Updated:
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றிவிட்டு காவல்துறை, தேசிய மாணவர் படை, முன்னாள் இராணுவ வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். அதையடுத்து சுகாதாரத்துறை, காவல்துறை, நகராட்சி, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். தொடர்து அவர் பேசும்போது, “இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின திருநாளை பெருமையுடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த இனிய நாளில், தாய்த்திருநாட்டின் விடுதலைக்கான அறப்போரில் ஈடுபட்டு தமது இன்னுயிரையும் இந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைத்துப் போற்ற வேண்டியது நமது அனைவரது கடமை.

சுதந்திர தினம்
சுதந்திர தினம்

புதுச்சேரியில் மீண்டும் நேர்மையான, வெளிப்படையான மக்களாட்சி மலர்ந்திட என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து நான்காவது முறையாக எனது தலைமையிலான ஆட்சியை பொறுப்பேற்க செய்திருக்கிறீர்கள். எமது அரசின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் ஆழத்தை நான் நன்கு அறிவேன். இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனமான (IFCO) ’நானோ’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகின் முதல் நானோ யூரியாவை அறிமுகப்படுத்தியிருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தின் விவசாயிகளுக்கு இந்த நானோ யூரியா கடந்த ஜூலை மாதம் 7-ம் தேதி அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது நெல், கரும்பு மற்றும் காய்கறி சாகுபடி செய்யும் புதுச்சேரி விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பயிர் உற்பத்தித் திட்டத்தின் கீழ் புதுச்சேரி பகுதியில் நெல் உற்பத்தி செய்திடும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக இரண்டு பருவங்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் 12,138 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல கரும்பு சாகுபடி செய்த 849 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 என்ற விகிதத்தில் சுமார் இரண்டு கோடிகளும், பருத்தி சாகுபடி செய்த 952 விவசாயிகளுக்கு ரூ.1.4 கோடியும், பயறு வகைகள் சாகுபடி செய்த 423 விவசாயிகளுக்கு சுமார் ரூ.9 லட்சமும், சிறுதானியங்கள் சாகுபடி செய்த 53 விவசாயிகளுக்கு ரூ.67,000 உற்பத்தி மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரி மக்களுக்கு தேவையான பசுமையான மற்றும் தரமான காய்கறிகளை அவர்களின் வீட்டுப் புறக்கடை மற்றும் மாடியில் அவர்களே சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைக்க ரூ.200 கோடி மதிப்புள்ள காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 2,000 பயனாளிகளுக்கு ஆடிப்பருவத்தில் இலவசமாக வழங்கியிருக்கிறோம்.

சுந்தந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி
சுந்தந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி

பாண்லே ஐஸ்கிரீம் வகைகள் மக்கள் அதிகம் விரும்பும் ஒன்றாக இருக்கிறது. ’அமுல்’ நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்த நிறுவனத்திற்கு தேவையான சுமார் 52-க்கும் மேற்பட்ட ஐஸ்கிரீம் வகைகளை பாண்லே நிறுவனம் உற்பத்தி செய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக ஐஸ்கிரீம் உற்பத்தி திறனை நாளொன்றுக்கு 10,000 லிட்டரிலிருந்து 20,000 லிட்டராக உயர்த்த தேசிய பால்வள வாரியத்துடன் தொழில்நுட்ப மற்றும் கட்டுமான ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.12.95 கோடி. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பில் 80 சதவிகிதமான ரூ.10.36 கோடி தொகையை குறைந்த வட்டி கடனாக வழங்க தேசிய பால்வள வாரியம் முன்வந்திருக்கிறது. மீதமுள்ள 20 சதவிகித தொகையான ரூ.2.59 கோடி பாண்லேவின் பங்களிப்பு. இந்த திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனை, மேற்பார்வை மற்றும் நிதி மேலாண்மை ஆகியவற்றை தேசிய பால்வள வாரியத்திடமிருந்து பெறும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தை மீண்டும் பசுமையாக மாற்றும் வகையில் 75,000 மரக்கன்றுகள் நடும் தொடக்கப் பெருவிழா இந்த மாதம் பாகூர் கொம்யூனில் உள்ள மணப்பட்டு கிராமத்தில் நடைபெற இருக்கிறது. நான் முதல் அமைச்சராக பொறுப்பேற்ற அன்றே மாதம்தோறும் உதவித்தொகை பெற்றுவரும் முதியவர்கள், விதவைகள், முதிர்கன்னிகள், திருநங்கைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு கூடுதலாக 500 ரூபாயை உயர்த்தி வழங்கிடவும், கூடுதலாக 10,000 புதிய பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கிடவும் முதல் கையெழுத்திட்டேன். அரசுத் துறைகளில் காலியாக உள்ள சுமார் 10,000 பணியிடங்களை உடனடியாக நிரப்ப உரிய நடவடிக்கைகளை எனது அரசு துரிதப்படுத்தியிருக்கிறது.

கொரோனா பணிக்காக விருது பெறும் புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி
கொரோனா பணிக்காக விருது பெறும் புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி

புதுச்சேரியின் பாரம்பர்யமிக்க ஏ.எஃப்.டி தொழிற்சாலையை தனியார் பங்களிப்புடன் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல ஏ.எஃப்.டி தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தின் அமைதியை பேணி பாதுகாப்பதிலும், சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதிலும் எமது அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதுச்சேரி முழுவதும் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து நகரை கண்காணிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின்படி நகரம் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்திய கம்பங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் வைஃபை (wi-fi) வசதி, பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கான சார்ஜர், காற்றின் தரம் அறிதல், அவசர கால உதவிக்கு அழைக்கும் தொலைபேசி, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் பொறுத்தப்படும்.

இந்த கம்பங்களை கண்காணிக்க ஏ.எஃப்.டி பஞ்சாலை வளாகத்தில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த கண்காணிப்புப் பணியில் சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்துக் காவலர்கள், நகராட்சி, போக்குவரத்து மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சுமார் 100 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். பழைய சிறைச்சாலை வளாகத்திலும், பழைய துறைமுக வளாகத்திலும் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள் கட்டப்படும். இந்தப் பணி இந்த நிதியாண்டிலேயே தொடங்கப்படும்.

எங்கள் அரசு பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை நாங்கள் மேற்கொண்டிருந்தாலும், அவற்றில் சிலவற்றை உங்கள் முன் கொண்டு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.