Published:Updated:

புதுச்சேரி: ``ஸ்மார்ட் சிட்டி நிதியை காங்கிரஸ் ஆட்சியில் செலவு செய்யவில்லை!” - முதல்வர் ரங்கசாமி

முதல்வர் ரங்கசாமி!

“புதுச்சேரி மாநில அந்தஸ்து நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதையும் பெற நடவடிக்கை எடுத்துவருகிறோம். நிச்சயமாக மத்திய அரசு நமக்கு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.” – முதல்வர் ரங்கசாமி.

புதுச்சேரி: ``ஸ்மார்ட் சிட்டி நிதியை காங்கிரஸ் ஆட்சியில் செலவு செய்யவில்லை!” - முதல்வர் ரங்கசாமி

“புதுச்சேரி மாநில அந்தஸ்து நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதையும் பெற நடவடிக்கை எடுத்துவருகிறோம். நிச்சயமாக மத்திய அரசு நமக்கு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.” – முதல்வர் ரங்கசாமி.

Published:Updated:
முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் நிறைவு செய்யப்பட்ட வளர்ச்சித் திட்டங்களின் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதிய வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். அந்த விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, ”இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு புதுச்சேரி மாநிலம் எந்தெந்த நிலையில் வளர்ச்சியடைந்திருக்கிறது என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் செய்ய முடியாத, செய்து முடிக்க முடியாத அனைத்துத் திட்டங்களையும் நாம் இப்போது செய்துகொண்டிருக்கிறோம்.

அமித் ஷாவுடன் முதல்வர் ரங்கசாமி
அமித் ஷாவுடன் முதல்வர் ரங்கசாமி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய அரசு நமக்கு ஒதுக்கிக் கொடுத்த நிதி கடந்த ஆட்சியில் செலவு செய்யப்படவில்லை. நம்முடைய அரசு பொறுப்பேற்ற பிறகு ரூ.600 கோடிக்கும் மேலான திட்டங்களை உள்துறை அமைச்சர் மூலம் இப்போது தொடங்கியிருக்கிறோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தேர்தலில் வாக்குறுதி கொடுத்திருந்தோம். இப்போது 390 இளைஞர்கள் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பல துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டுவருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எங்களுடைய அரசு, 10,000 அரசுப் பணியிடங்களை நிச்சயமாக நிரப்பும். அதேபோல் புதுச்சேரிக்குக் கொடுக்கவேண்டிய நிதியை மத்திய அரசு கொடுத்துக்கொண்டிருக்கிறது. மேலும் கூடுதல் நிதி வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். அதையும் நிச்சயமாகப் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இப்போது பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் ரூ.150 லட்சத்துடன், காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ரூ.2 லட்சத்தையும் இணைத்து ரூ.3.5 லட்சமாக வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மக்கள் வீடு கட்ட ரூ.5.5 லட்சம் வழங்கப்படுகிறது. நம்முடைய அரசு அறிவித்தபடி பிள்ளைகளுக்கு உயர்கல்வி வரை இலவசக் கல்வியை கொடுத்துக்கொண்டிருக்கிறது.

மேலும் மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற்று புதுச்சேரியை சிறந்த மாநிலமாகக் கொண்டுவருவோம். புதுச்சேரி மாநில அந்தஸ்து நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதையும் பெற நடவடிக்கை எடுத்துவருகிறோம். நிச்சயமாக மத்திய அரசு நமக்கு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமர் அறிவித்தபடி பெஸ்ட் புதுச்சேரியை இந்த அரசு நிறைவேற்றும். மத்திய அரசு நமக்குக் கூடுதலாக நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். பிரதமரும், உள்துறை அமைச்சரும் நமக்குக் கூடுதல் நிதி வழங்க ஆவன செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தி நம்முடைய வருவாயை உயர்த்துவதிலும் அரசு கவனம் செலுத்தும். உள்துறை அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை அரசு விரைவாகச் செய்து முடிக்கும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism