Published:Updated:

``மாணவர்களுக்கான உணவை எனக்கும் அனுப்புங்கள்!" – மதிய உணவு விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி அதிரடி

முதல்வர் ரங்கசாமி

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு குறித்து தொடர்ச்சியாக எழுந்த புகார்களின் அடிப்படையில், அந்த உணவை தினமும் சாப்பிட்டு ஆய்வு செய்துவருகிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.

``மாணவர்களுக்கான உணவை எனக்கும் அனுப்புங்கள்!" – மதிய உணவு விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி அதிரடி

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு குறித்து தொடர்ச்சியாக எழுந்த புகார்களின் அடிப்படையில், அந்த உணவை தினமும் சாப்பிட்டு ஆய்வு செய்துவருகிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.

Published:Updated:
முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்காக பெங்களூரைச் சேர்ந்த அட்சய பாத்ரா என்ற தனியார் அறக்கட்டளையுடன் கடந்த 2018-ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறது புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்கம். இந்தியாவில் 12 மாநிலங்களில் மதிய உணவு திட்டத்தைச் செயல்படுத்திவரும் அட்சய பாத்ரா அறக்கட்டளை நிறுவனம், புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் 300 பள்ளிகளைச் சேர்ந்த 50,000 மாணவர்களுக்கு உணவளிக்கத் திட்டமிட்டது. அதனடிப்படையில் லாஸ்பேட்டையில் அமைந்திருக்கும் மத்திய சமையற்கூடம் அட்சய பாத்ரா அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பில் அட்சய பாத்ரா அமைப்பினர் அதை நவீனப்படுத்தினர்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தாகி மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகே அங்கு சமையல் பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த ஆண்டு இறுதியில் மதிய உணவு வழங்கப்பட்டது. தற்போது நடப்பு கல்வியாண்டில் புதுவையில் கடந்த 23-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரொட்டி, பால், ஊட்டச்சத்து பானம், மதிய உணவு வழங்கும் திட்டமும் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அரசு சார்பில் காலை ரொட்டி, பால் வழங்கப்படுகிறது. அதனுடன் தனியார் அறக்கட்டளை மூலம் ஊட்டச்சத்து பானம் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டிருக்கிறது. அதேபோல மதிய உணவு அட்சய பாத்ரா திட்டத்தின் மூலம் புதுவை அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தயிர், தக்காளி, சாம்பார் சாதம் என்ற அடிப்படையில் மதியம் சைவ உணவை அந்த நிறுவனம் வழங்கிவருகிறது. லாஸ்பேட்டையிலுள்ள மத்திய உணவுக்கூடத்திலிருந்து மதிய உணவு தயார் செய்து அந்தந்தப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது. இதற்கிடையே அந்தத் தனியார் நிறுவனம் வழங்கும் மதிய உணவில் பூண்டு, வெங்காயம் போன்றவை சேர்க்கப்படாமல் ருசியின்றி பெயரளவில் வழங்கப்படுவதாக பொதுநல அமைப்பினர் சிலர் அதிருப்தி தெரிவித்துவந்தனர். உணவு தரம் தொடர்பாக பள்ளிகள் தரப்பில் மாணவ, மாணவிகள் என்ன நினைக்கிறார்கள் என்ற கருத்துகளும் பெறப்பட்டன. இந்த நிலையில் அட்சய பாத்ரா அமைப்பினர் மாணவ, மாணவிகளுக்குத் தயாரிக்கும் மதிய உணவை ஆய்வுசெய்ய முடிவெடுத்தார் முதல்வர் ரங்கசாமி.

அதன்படி “மாணவர்களுக்கு வழங்கும் மதிய உணவை எனக்கும் அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. அதையடுத்து நேற்று முன்தினம் மதியம் மதிய உணவு சட்டப்பேரவையிலுள்ள அவரது அலுவலகத்துக்கு எடுத்துவரப்பட்டது. அந்த உணவை முதல்வர் ரங்கசாமி சாப்பிட்டுப் பார்த்த முதல்வர் ரங்கசாமி, ``இனி தினமும் மாணவர்களுக்கான உணவை நான் சாப்பிட்டுப் பார்ப்பேன்” என்று அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்.