Published:Updated:

``ஜிப்மரில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை புறந்தள்ளக்கூடாது..!" – முதல்வர் ரங்கசாமி வருத்தம்

முதல்வர் ரங்கசாமி

”நிதி பற்றாக்குறை, கடன், வட்டி சுமையாகத்தான் உள்ளது. கூடுதல் நிதி வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து கோரி வருகிறோம். மாநில அந்தஸ்தும் கேட்டுள்ளோம். மத்திய அரசை பொறுத்தவரை கேட்டவுடன் எதுவும் கிடைப்பதில்லைதான்” – முதல்வர் ரங்கசாமி

``ஜிப்மரில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை புறந்தள்ளக்கூடாது..!" – முதல்வர் ரங்கசாமி வருத்தம்

”நிதி பற்றாக்குறை, கடன், வட்டி சுமையாகத்தான் உள்ளது. கூடுதல் நிதி வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து கோரி வருகிறோம். மாநில அந்தஸ்தும் கேட்டுள்ளோம். மத்திய அரசை பொறுத்தவரை கேட்டவுடன் எதுவும் கிடைப்பதில்லைதான்” – முதல்வர் ரங்கசாமி

Published:Updated:
முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த 22-ம் தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்ததையடுத்து, அதன்மீது விவாதம் நடைப்பெற்று வருகிறது.

இன்று நடைப்பெற்ற விவாதத்தில் தி.மு.க எம்.எல்.ஏ நாஜிம்: ஜிப்மர் நிறுவனத்துடன் சுகாதாரத்துறை போட்டுக்கொண்ட ஒப்பந்த அடிப்படையில் காரைக்கால் பொது மருத்துவமனை புனரமைப்புக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.30 கோடி செலவிடப்பட்டதா? எந்தப் பணிகளுக்கு செலவிடப்பட்டது. புதிய கட்டடம் கட்டும் திட்டம் உள்ளதா?

முதலமைச்சர் ரங்கசாமி: காரைக்கால் அரசு மருத்துவமனை புனரமைப்பு பணி கொரோனா பாதிப்பில் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் எந்த பணியும் நடக்கவில்லை. செலவு கணக்குகளை ஜிப்மர் நிர்வாகம் மேற்கொள்ளாததால் இதுவரை செய்த பணிக்கான செலவு, மீதமுள்ள தொகை பற்றிய விவரம் ஜிப்மர் நிர்வாகத்திடம் மட்டுமே உள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் பழுது மற்றும் சீரமைப்பு பணிகள் அவசர கால பிரிவில், அறுவை சிகிச்சை பிரிவில் மட்டும் சிறு பழுதுபார்க்கும் பணிகள், மகப்பேறு பிரிவில் மத்திய பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. அரசு மருத்துவமனையை புனரமைப்பதற்கு பதிலாக புதிய கட்டடம் கட்டித்தரும்படி கோரிக்கை எழுந்துள்ளது. அது தொடர்பாக ஒப்பந்தத்தில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை. புதிய கட்டடம் தரை தளத்துடன் 3 மாடிகள் 10,000 சதுர அடியில் கட்ட முன்மொழிவு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கும்.

சட்டப்பேரவை விவாதத்தில் முதல்வர் ரங்கசாமி
சட்டப்பேரவை விவாதத்தில் முதல்வர் ரங்கசாமி
KURUZ THANAM A

நாஜிம்: ஜிப்மருடன் போட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துங்கள். பாதியில் நிறுத்தப்பட்ட பணிகளால் தூண்கள் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

ரங்கசாமி: மத்திய சுகாதாரத்துறையில் நிதி கேட்டுள்ளோம். ரூ.20 கோடி வரை நிதி தருவதாக கூறியுள்ளனர். காரைக்கால் அரசு மருத்துவமனை புதிதாக கட்ட இடம் தேர்வு செய்துள்ளோம். விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். கடந்த ஆட்சியில் இதை விரைவு படுத்தாமல் விட்டுவிட்டனர்.

சுயேச்சை எம்.எல்.ஏ நேரு: புதுவையில் உள்ள ஜிப்மர் அந்நிய தேசத்தில் உள்ளதுபோல உள்ளது. பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்குக்கூட சிகிச்சை கிடைக்கிறது. ஆனால் புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை. இங்கு மக்கள் தொடர்பு அதிகாரியை நியமித்து புதுவையைச் சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரங்கசாமி: சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை புறந்தள்ளக்கூடாது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது அரசு, டாக்டர்களின் கடமை. இதைத் தொடர்ந்து ஜிப்மர் நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகிறோம், பேசி வருகிறோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாஜிம்,``ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் காப்பீடு அட்டை வழங்கியுள்ளனர். அந்த அட்டையால் மக்களுக்கு பயனில்லை” என்றார். அதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் காங்கிரஸ், தி.மு.க உறுப்பினர்கள் பதிலளித்து பேசியதால் சபையில் கூச்சல், குழப்பம், அமளி ஏற்பட்டது.

எதிர்கட்சித் தலைவர் சிவா: காப்பீடு திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம் என்கின்றனர். இந்த அட்டையை புதுவையில் எந்த மருத்துவமனையும் ஏற்பதில்லை. குறிப்பாக ஜிப்மர் மருத்துவமனையும் ஏற்பதில்லை. அதையும் மீறி ஒரு சில இடங்களில் காப்பீடு அட்டையை ஏற்பதாக இருந்தாலும் அதற்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் சிபாரிசு தேவைப்படுகிறது. இதனால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

நாஜிம்: ஏற்கெனவே அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளித்து வருகிறோம். காப்பீடு திட்டத்தில் அரசு மருத்துவமனைகளையும் இணைத்துள்ளனர். அரசு மருத்துவமனைக்கு எதற்கு காப்பீடு அட்டை? சிகப்பு ரேஷன்கார்டு வைத்துள்ளவர்கள்தான் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக கருதப்படுகின்றனர். மஞ்சள் கார்டு வைத்துள்ளவர்களில் ஏழைகள் இல்லையா? அவர்களுக்கு காப்பீடு திட்டம் கிடையாதா?

ரங்கசாமி: திட்டத்தை குறைகூறுவதில் பயனில்லை. திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதில் உள்ள குளறுபடிகள் அனைத்தையும் களைவோம்.

சபாநாயகர் செல்வம்: ஆயுஷ்மான் திட்டத்தில் உள்ள குறைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றும், அனைவருக்கும் சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுப்பார்.

ஆளுநர் உரைக்கு நேற்று நன்றி தெரிவித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, ``நிதி பற்றாக்குறை, கடன், வட்டி சுமையாகத்தான் உள்ளது. கூடுதல் நிதி வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து கோரி வருகிறோம். மாநில அந்தஸ்தும் கேட்டுள்ளோம். மத்திய அரசை பொறுத்தவரை கேட்டவுடன் எதுவும் கிடைப்பதில்லைதான். நாம் 13 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். தற்போதும் சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பலாம்.

``ஜிப்மரில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை புறந்தள்ளக்கூடாது..!" – முதல்வர் ரங்கசாமி வருத்தம்

மாநில அந்தஸ்து வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. அது பொறுமையாக நமக்கு கிடைக்கும். அப்போது நாம் மகிழ்ச்சியடைவோம். கோப்புகள் திரும்பி வருவது போன்ற குறைகள் இருக்கத்தான் செய்கிறது. வரும்காலத்தில் நிர்வாகத்தை சீரமைத்து மாற்ற முயற்சித்து வருகிறோம்” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

அதேபோல இன்றும் ஜிப்மர் மருத்துவமனை குறித்து அவர் பேசியிருப்பது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.