Published:Updated:

`தடுப்பூசிக்காக கவர்னர் வீதி வீதியாக செல்கிறார்!' - முதல்வர் ரங்கசாமி பாராட்டு

முதல்வர் ரங்கசாமி
News
முதல்வர் ரங்கசாமி

``புதுவை மாநிலத்திற்கு தேவையான உதவியை மத்திய அரசு செய்யும். புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும், அதனை நாம் வலியுறுத்துவோம்" - முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி அச்சு மற்றும் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட இந்த விழாவில் பத்திரிகையாளர் சங்க தலைவர் ராஜா தலைமை வகித்தார். விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, ``கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்கு தடுப்பூசி அவசியம். கவர்னர் அதிரடியாக வீதி, வீதியாக இறங்கி கொரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறார்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

புதுவை மாநிலத்திற்கு தேவையான உதவியை மத்திய அரசு செய்யும். புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும், அதனை நாம் வலியுறுத்துவோம். பத்திரிகை பணி சிறந்த பணி. சரியான செய்திகளை, சரியான நேரத்தில் பத்திரிகையாளர்கள் கொடுக்க வேண்டும், பத்திரிகையாளர்களுக்கு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். பத்திரிகையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிச்சயம் நிறைவேற்றும்" என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவரையடுத்து பேசிய கவர்னர் தமிழிசை, ``கொரோனா உச்சகட்டத்தில் இருந்தபோது பத்திரிகையாளர்கள் பணி சிறப்பாக இருந்தது. பத்திரிகையாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து விதங்களிலும் உதவினர். பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் பத்திரிகையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பத்திரிகையாளர்களுக்கு செய்யும் உதவி சமுதாயத்திற்கு செய்யும் உதவி. ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருந்தபோது பத்திரிகையாளர்கள் மட்டும் மக்களுக்கு செய்திகளை சரியான முறையில் அளித்து பணி செய்தனர். தடுப்பூசி செலுத்துவது குறித்த விழிப்புணர்வை பத்திரிகையாளர்கள் முன்னெடுத்து சென்றதால் புதுவை அரசு எப்போதும் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக இருக்கும். பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம் புதுவைதான்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இறுதியாக பேசிய பத்திரிகையாளர் சங்க தலைவர் ராஜா, ``தமிழகத்தை போல பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆண்டுதோறும் சுதந்திர தினவிழாவின் போது, சிறந்த பத்திரிகையாளர், புகைப்பட கலைஞர், ஒளிப்பதிவாளரை செய்தி மற்றும் விளம்பரத்துறை மூலம் தேர்வு செய்து கௌரவிக்க வேண்டும்.

`தடுப்பூசிக்காக கவர்னர் வீதி வீதியாக செல்கிறார்!' - முதல்வர் ரங்கசாமி பாராட்டு

சமூக விரோதிகளிடமிருந்து பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளதை போலவே பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும். மூத்த பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் தொடர்ந்து செயல்பட ஏதுவாக அதற்கான நிதியை பட்ஜெட்டில் தனியாக துறைக்கு ஒதுக்கித்தர வேண்டும். தமிழகத்தை போல பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும்" என்றார்.