Published:Updated:

`காந்தி உயிரோடு இருந்தால் கண்ணீர் விட்டிருப்பார்!' - பா.ஜ.க-வை விமர்சிக்கும் நாராயணசாமி

`காந்தி உயிரோடு இருந்திருந்தால் பி.ஜே.பி-யின் ஆட்சியைப் பார்த்து ரத்தக்கண்ணீர் விட்டிருப்பார்'' என்று செய்தியாளர்களிடம் பேசினார்.

Narayanasamy
Narayanasamy

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசினார்.

Narayanasamy
Narayanasamy

அவர் கூறுகையில்,``அகிம்சை போராட்டத்தின் மூலம் மகாத்மா காந்தி நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார். ஆனால், நாட்டில் இன்று சுதந்திரம் எப்படியுள்ளது என்பது உங்களுக்கே தெரியும். `இந்தியா, இந்துக்களின் தேசமாக வேண்டும்' என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பாகவத் பேசியுள்ளார். அந்தக் கொள்கையைத்தான் பி.ஜே.பி ஆட்சியாளர்கள் புகுத்த நினைக்கிறார்கள்.

`சிவாஜி கணேசனை மிஞ்சிய ஒரு நடிகர் அவர்'- யாரைச் சொல்கிறார் நாராயணசாமி?

பேனர் கலாசாரத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, பேனர் கலாசாரம் மீண்டும் வந்தால் சுபஸ்ரீ போன்ற மேலும் பலரை பலி கொடுக்க வேண்டிய நிலை உருவாகும். நீதிமன்ற உத்தரவை மத்திய அரசும் மாநில அரசும் மதித்து நடக்க வேண்டும்.

Narayanasamy
Narayanasamy

காந்தி உயிரோடு இருந்திருந்தால் பா.ஜ.க-வின் ஆட்சியைப் பார்த்து ரத்தக்கண்ணீர் விட்டிருப்பார். பா.ஜ.க ஆட்சியில் பல்வேறு தொழிற்சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுவருகிறது.

6 கோடி பேருக்கு வேலை இல்லாத நிலையை உருவாக்கியவர் மோடி. பல கோடி மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதமாக இருந்தது. அது, தற்போது 4.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

Narayanasamy
Narayanasamy

வரிக்குறைப்பு பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே பயன்படுகிறது, ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே மொழி ஒரே கலாசாரம் என்ற மோடியின் குறிக்கோள் எடுபடாது. மோடி தமிழ்மொழி குறித்தும் கலாசாரம் குறித்தும் உயர்வாகப் பேசுகிறார். இன்னொரு பக்கம் அமித் ஷா இந்தி மொழியை உயர்த்திப் பேசிவருகிறார். தமிழ்மொழி விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறார்கள்'' என்றார்.