Published:Updated:

புதுச்சேரி: `விதிமுறைகளைத் தளர்த்துங்கள்...' - மத்திய அமைச்சர் முன்பு குமுறிய முதல்வர் ரங்கசாமி

முதல்வர் ரங்கசாமி!

``நிர்வாகத்தில் சில நடைமுறைச் சிக்கல்களால் கால தாமதம் ஏற்படுகிறது. அனைத்து விஷயங்களுக்கும் மத்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டிய நிலை உள்ளது. இதனால் குறித்த காலத்தில் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை.” – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: `விதிமுறைகளைத் தளர்த்துங்கள்...' - மத்திய அமைச்சர் முன்பு குமுறிய முதல்வர் ரங்கசாமி

``நிர்வாகத்தில் சில நடைமுறைச் சிக்கல்களால் கால தாமதம் ஏற்படுகிறது. அனைத்து விஷயங்களுக்கும் மத்திய அரசின் அனுமதியைப் பெறவேண்டிய நிலை உள்ளது. இதனால் குறித்த காலத்தில் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை.” – முதல்வர் ரங்கசாமி

Published:Updated:
முதல்வர் ரங்கசாமி!

மத்திய சுற்றுலா அமைச்சக நிதியின் கீழ் சுதேசி தர்ஷன் திட்டத்தில், மேம்படுத்தப்பட்ட திட்டங்களை சுற்றுலாப்பயணிகள், பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா இன்று அண்ணா சாலை தனியார் விடுதியில் நடந்தது. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “சுற்றுலாவை மேம்படுத்த புதுவைக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி அளித்திருக்கிறது. மேலும் நிதி வழங்கவும் ஒப்புக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. புதுவை சுற்றுலாவை மேம்படுத்தவேண்டிய சிறிய மாநிலம். சுற்றுலா வளர்ச்சியில் புதுவை மிக முக்கியப் பங்காற்றிவருகிறது. சொந்த நிதி ஆதாரத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்திவருகிறது. அதற்குத் தேவையான நடவடிக்கையை அரசு எடுத்துவருகிறது. வணிகத்துறை, கலால்துறை, பத்திரப்பதிவுத்துறைகள் மூலம் புதுவைக்கு வருவாய் கிடைக்கிறது.  இதுதவிர சுற்றுலா வளர்ச்சியின் மூலமும் வருவாய் கிடைக்கும். மத்திய அரசு நிதியை முறையாகச் செலவிட்டு சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். நிர்வாகத்தில் இருக்கும் சில நடைமுறைச் சிக்கல்களால் காலதாமதம் ஏற்படுகிறது.

விழாவில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் முதல்வர் ரங்கசாமி
விழாவில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் முதல்வர் ரங்கசாமி

அனைத்து விஷயங்களுக்கும் மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டிய நிலை உள்ளது. அதனால் குறித்த காலத்தில் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. சில விதிகளைத் தளர்த்தி திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. எதை விரைவாகச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய வேண்டும். நிலத்தைத் தனியாருக்கு வழங்க வேண்டுமென்றால் எத்தனை ஆண்டு வழங்க வேண்டும் என்பதில் பல கேள்விகள் எழுகின்றன. அதை நிர்ணயிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். தனியார்கள் சுற்றுலாவில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அவர்கள் தேவையான லாபம் ஈட்டுவது அவசியம். முதலீடு செய்பவர்கள் லாபம் ஈட்ட நினைக்கின்றனர். சில விதிகளைத் தளர்த்தினால் அவர்கள் முதலீடு செய்ய புதுவைக்கு வருவார்கள் என்பது உண்மை. மாநிலத்தில் வேகமான முன்னேற்றம் இல்லாத நிலைக்கு காலதாமதம் ஒரு காரணம். நிர்வாகத்தில் சிறு சிறு தடங்கல்களால் காலதாமதம் ஏற்படுகிறது. புத்தாண்டுக் கொண்டாட்ட தேடலில் புதுவை முதலிடத்தில் இருப்பது பெருமைக்குரியது.

அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துதர வேண்டும். நட்சத்திர விடுதிகளின் தேவை இருக்கிறது. ஆனால் அதற்கு அனுமதி கொடுப்பதில் சிக்கல் இருக்கிறது. புதுவையில் முதலீடு செய்தால் உடனுக்குடன் லாபம் ஈட்ட முடியும் என்ற நிலை இருந்தால்தான் முதலீடு செய்ய வருவார்கள். பலர் முதலீடு செய்ய அச்சப்படுகின்றனர். இந்த நிலை மாறினால், புதுவையின் சுற்றுலா வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். புதுவையை சிங்கப்பூர்போல மாற்ற முடியும். புதுவையில் விரைவான வளர்ச்சி வர வேண்டும். அதிகாரிகள் இதற்கேற்பச் செயல்பட வேண்டும். மழை பெய்து வருவதால் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டிருக்கிறது. ஓராண்டில் இந்தப் பணிகள் முடிவடையும். மத்திய அமைச்சர் மிகுந்த அக்கறையோடு கல்வி, மருத்துவச் சுற்றுலாமீது கவனம் செலுத்தும்படி தெரிவித்திருக்கிறார். அவர்களின் எண்ணப்படி வேகமான வளர்ச்சியைப் புதுவையில் கொண்டுவர வேண்டும்.

அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும். முதலீட்டாளர்கள் அவசியம் வர வேண்டும். அவர்களுக்கு தேவையான வளர்ச்சியை அரசு செய்து கொடுக்கும்” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, “மத்திய அரசின் சுதேசி தர்ஷன் திட்டத்தின் 100 சதவிகித நிதியில் புதுவையில் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்துக்கும் புதுவை, காரைக்கால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் மத்திய அரசு ரூ.100 கோடி நிதியை வழங்கவிருக்கிறது. ஆன்மிகச் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிதி அளிக்கப்படும். முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது, சில குறைபாடுகளைத் தெரிவித்தார். அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டு குறைகளைத் தீர்ப்போம். புதுவை அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும்” என்றார்.