Published:Updated:

``புதுச்சேரியில் இந்த ஆண்டு இறுதிக்குள் 1,400 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்!” – முதல்வர் ரங்கசாமி

முதல்வர் ரங்கசாமி

”100 ஏக்கரில் பார்மா தொழிற்சாலைகள் தொடங்க அரசு அனுமதி வழங்கப்பட இருக்கிறது. மீதமுள்ள நிலத்தில் ஐ.டி உட்பட தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்க உள்ளோம்.” – முதல்வர் ரங்கசாமி

``புதுச்சேரியில் இந்த ஆண்டு இறுதிக்குள் 1,400 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்!” – முதல்வர் ரங்கசாமி

”100 ஏக்கரில் பார்மா தொழிற்சாலைகள் தொடங்க அரசு அனுமதி வழங்கப்பட இருக்கிறது. மீதமுள்ள நிலத்தில் ஐ.டி உட்பட தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்க உள்ளோம்.” – முதல்வர் ரங்கசாமி

Published:Updated:
முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் முதல்வர் ரங்கசாமி. அப்போது அவர், ``பிரதமர், மத்திய நிதி மந்திரி, உள்துறை மந்திரி ஆகியோரைச் சந்தித்து புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கு ரூ.2,000/- கோடி தேவை என வலியுறுத்தியிருந்தோம். தற்போது மத்திய அரசு ரூ.1,400/- கோடி நிதி அளிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கு பிரதமர், நிதி மந்திரி, உள்துறை மந்திரிக்கு நன்றி தெரிவிக்கிறோம். கடந்த ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக சீர்கேடுகளை படிப்படியாக சீரமைத்து வருகிறோம். புதுவை அரசில் 10,000 காலி பணியிடங்கள் உருவாகியுள்ளன. அந்த பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேநேரத்தில் பிரதமர் அலுவலகத்திலிருந்தும் பணியிடங்களை விரைந்து நிரப்பும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் 1,400 பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளோம். அதில் 846 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒரு சில தினங்களில் வெளியாகும். அதன்பின் 600 பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பு வெளியிடப்படும். அடுத்த ஆண்டு 2,000 பணியிடங்கள் நிரப்பப்படும். புதுவை அரசின் சுகாதாரத்துறையில் சிறந்த வல்லுநர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் எந்த குறைபாடும் இல்லை. சுகாதாரத்துறையில் 300 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்மூலம் சுகாதாரத்துறை பணிகள் மேம்பாடு அடையும்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்திருந்தோம். அந்த அறிவிப்பை செயல்படுத்த அரசு விரைவான நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த காலத்தில் சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க 800 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியிருந்தோம். அந்த நிலத்தை மத்திய அரசு மீண்டும் புதுவை அரசிடம் ஒப்படைத்துள்ளது. அந்த நிலம் பிப்டிக் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அங்கு 100 ஏக்கரில் பார்மா தொழிற்சாலைகள் தொடங்க அரசு அனுமதி வழங்க உள்ளது. மீதமுள்ள நிலத்தில் ஐ.டி உட்பட தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்க உள்ளோம்.

முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ள 16,000 பேருக்கு ஒரே நாளில் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்பின் விண்ணப்பித்தவுடன் உதவித்தொகை கிடைக்கும். விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக அரசிடம் நிலம் கோரியுள்ளோம். தமிழக அரசு இதுவரை நிலம் ஒதுக்கவில்லை. தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலை தொடங்குவதற்கு விமானப் போக்குவரத்து இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதனால் விமான நிலைய விரிவாக்க பணியை விரைவுபடுத்தியுள்ளோம்” என்றார்.