Published:Updated:

``உலக வரைபடத்தில் புதுச்சேரி முக்கிய இடத்தைப் பிடிக்கும்” - முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

``தேசத்தின் மாண்பைக் கட்டிக் காக்கும் பெருமைக்குரிய எல்லா தருணங்களிலும் புதுச்சேரி எப்போதும் முன்னணியில் இருந்துவந்திருக்கிறது.” - முதல்வர் ரங்கசாமி

``உலக வரைபடத்தில் புதுச்சேரி முக்கிய இடத்தைப் பிடிக்கும்” - முதல்வர் ரங்கசாமி

``தேசத்தின் மாண்பைக் கட்டிக் காக்கும் பெருமைக்குரிய எல்லா தருணங்களிலும் புதுச்சேரி எப்போதும் முன்னணியில் இருந்துவந்திருக்கிறது.” - முதல்வர் ரங்கசாமி

Published:Updated:
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

கடற்கரை சாலையில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் ரங்கசாமி, `` `தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் திறமை இந்தியர்களுக்கு இல்லை’ என்றும், `இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி மறைந்துபோனால் அவர்கள் மெல்ல மெல்ல உருவாக்கிய முற்போக்கு நாகரிகம் ஓர் இரவில் அழிந்துவிடும்’ என்றும் இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் சொன்னார்கள். `சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கிய விடுதலை வீரர்களின் தியாகத்தால் நம் அடிமை விலங்கை உடைத்தெறிந்தோம். நம் உணர்வில் ஊறிய தேசபக்தியால் இந்திய திருநாட்டை ஒரு தனித்தன்மை மிக்க நாடாக உலக அரங்கில் உயர்த்தியிருக்கிறோம்.

முதல்வர் ரங்கசாமி
முதல்வர் ரங்கசாமி

தேசத்தின் மாண்பைக் கட்டிக் காக்கும் பெருமைக்குரிய எல்லா தருணங்களிலும் புதுச்சேரி எப்போதும் முன்னணியில் இருந்துவந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, அது வளர்ச்சிகளும் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கிவந்திருக்கிறது. அந்தச் சாதனையை எமது அரசு எப்போதும்போல் இப்போதும் முன்னெடுத்துச் செல்வதில் பெருமிதம்கொள்கிறது. புதுச்சேரி மக்களின் ஏகோபித்த ஆதரவோடு மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை புதுச்சேரியில் கொண்டுவர மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆசியோடு பொறுப்பேற்ற எனது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, கடந்த ஓராண்டில் ஆக்கபூர்வமான பல வளர்ச்சிப் பணிகளை செய்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விவசாயப் பயிர்களின் உற்பத்தியை அதிகரித்திடவும், அதன் மூலம் வேளாண் பெருமக்களின் வருமானத்தை உயர்த்தவும் எனது அரசு வேளாண்மைக்குச் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றிவருகிறது. 2021-22-ம் ஆண்டில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட 7,036 விவசாயிகளுக்குப் பயிர்களுக்கான நிவாரணத் தொகையாக 7.1 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

``உலக வரைபடத்தில் புதுச்சேரி முக்கிய இடத்தைப் பிடிக்கும்” - முதல்வர் ரங்கசாமி

காரைக்கால் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதியும், நிதியும் மத்திய அரசிடம் கோரியிருக்கிறோம். பள்ளி, கல்லூரி தரவரிசையில் புதுவை 4-ம் இடத்தில் இருக்கிறது. ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக 12 திட்டங்களும், அந்தச் சமுதாய மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த 12 திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. மீன் உற்பத்தியைப் பெருக்கவும், மீனவர் நலனை மேம்படுத்தவும் பல்வேறு நலத் திட்டங்களை அரசு செம்மையாகச் செயல்படுத்திவருகிறது.

மகளிர் முன்னேற்றத்திற்காக ஒருங்கிணைந்த பல நலத் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறோம். நிலமற்ற ஏழை மக்களுக்குக் கடந்த ஓராண்டில் 115 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. இலவச அரிசித் திட்டத்தின் நேரடி பணப் பரிமாற்றம் மூலம் அரிசிக்கு பதிலாக பணமாக மானியத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்துக்குப் பிறகு சுற்றுலா, விருந்தோம்பல் நல்ல வளர்ச்சி கண்டிருக்கிறது. பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான தளத்தை விரிவுபடுத்த தமிழகப் பகுதியிலிருந்து 395 ஏக்கர் நிலமும், புதுவைப் பகுதியில் 30 ஏக்கர் நிலமும் கையகப்படுத்த வேண்டும். இதற்காக ரூ.425 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதியை மத்திய அரசிடம் கோரியிருக்கிறோம்.

இந்தத் திட்டம் நிறைவேறும்போது உலக வரைபடத்தில் புதுவை ஒரு முக்கிய இடத்தை பெறும். மாநில அமைதிக்கு மகத்தான காவல் சேவையை அரசு வழங்கிவருகிறது. காவலர் பணியிடங்கள் வெளிப்படையாக, நேர்மையாக நிரப்பப்பட்டுள்ளன. அரசு எந்திரம் தொய்வின்றி இயங்க அரசு ஊழியர்கள் நலனிலும் அதிக கவனம் செலுத்திவருகிறோம். 7-வது ஊதியக்குழு சம்பளம், நிலுவைத்தொகை, பதவி உயர்வு ஆகியவற்றை வழங்கியிருக்கிறோம். மக்களின் நலன் கருதியும், மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவும் எனது அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது. வருங்காலத்திலும் இது போன்ற புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு முனைப்பாக இருக்கிறது. மீண்டும் ஒரு முறை மாநில மக்கள் அனைவருக்கும் என் உளம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க பாரதம், வளர்க புதுவை மாநிலம்” என்றார்.