Published:Updated:

புதுச்சேரியில் இன்று பட்ஜெட் தாக்கல்... இலவச அறிவிப்பு ஆயுதத்தைக் கையிலெடுப்பாரா முதல்வர் ரங்கசாமி ?

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் முதல்வர் ரங்கசாமி.

புதுச்சேரியில் இன்று பட்ஜெட் தாக்கல்... இலவச அறிவிப்பு ஆயுதத்தைக் கையிலெடுப்பாரா முதல்வர் ரங்கசாமி ?

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் முதல்வர் ரங்கசாமி.

Published:Updated:
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் நடைபெற்றுவரும் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் முதல்வராக இருக்கிறார் ரங்கசாமி. கடந்த மார்ச் மாதம் கூடிய சட்டப்பேரவையில் ஐந்து மாதச் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி. இந்நிலையில் 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 10-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தொடரில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அப்போது ஒப்புதல் கொடுக்காததால், சட்டப்பேரவையைக் காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார் சபாநாயகர் செல்வம். அதையடுத்து டெல்லிக்குச் சென்ற முதல்வர் ரங்கசாமி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றவர்களைச் சந்தித்து பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடியுடன் முதல்வர் ரங்கசாமி
பிரதமர் மோடியுடன் முதல்வர் ரங்கசாமி

அதையடுத்து மத்திய அரசு ரூ.10,696 கோடி பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்திருப்பதாகத் தகவல் வெளியானது. அதனால் இன்று காலை 9:45 மணி அளவில் புதுச்சேரி சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. அப்போது நிதித்துறை அமைச்சர் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2022-23 ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். 2022-23 ஆண்டுக்கு ரூ.11,000/- கோடி வரைவு பட்ஜெட்டை மத்திய அரசிடம் தாக்கல் செய்திருந்தார் முதல்வர் ரங்கசாமி. அந்தத் தொகைக்கு ஒப்புதல் தர மத்திய அரசு மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அது ஒருபுறமிருக்க இலவச அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அந்த அறிவிப்புகளால் ஆட்சிக்கு வந்த முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் என்ன திட்டங்களை அறிவிக்கப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர் மக்கள். வழக்கம்போல இலவசங்களுக்கு ஆதரவாக நின்று மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கப்போகிறாரா அல்லது தனது ஆயுதமான இலவச அறிவிப்புகளைக் கையில் எடுப்பாரா என்ற கேள்வி தற்போது புதுச்சேரியில் எழுந்திருக்கிறது.