Published:Updated:

புதுச்சேரி: ``அமித் ஷாவின் வருகையை எதிர்ப்பது ஜனநாயகக் கடமை!" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

அமித் ஷா

``பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. அதற்கான வாக்குமூலமாகத்தான் அமித் ஷாவின் கருத்து இருக்கிறது.” - இந்திய கம்யூனிஸ்ட்

புதுச்சேரி: ``அமித் ஷாவின் வருகையை எதிர்ப்பது ஜனநாயகக் கடமை!" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

``பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. அதற்கான வாக்குமூலமாகத்தான் அமித் ஷாவின் கருத்து இருக்கிறது.” - இந்திய கம்யூனிஸ்ட்

Published:Updated:
அமித் ஷா

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``புதுச்சேரிக்கு வருகை தரும் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு போராட்டத்தை நடத்த முடிவு செய்திருக்கிறோம். கடந்த 10 நாள்களுக்கு முன்பு அமித் ஷா தலைமையில் நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ மொழிகளுக்கான கமிட்டியின் 37-வது கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் ’அனைத்து மாநிலங்களிலும் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழி கட்டாயமாக இருக்க வேண்டும். கேபினெட்டில் உள்ள 70% கோப்புகள் இந்தியில்தான் உள்ளன. 9-ம் வகுப்பு வரை அனைத்து மாநிலங்களிலும் இந்தி கட்டாயமாக இருக்க வேண்டும்’ என்று பேசியிருக்கிறார் அமித் ஷா. பன்முக தன்மை கொண்ட இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் சலீம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் சலீம்

அதற்கான வாக்குமூலமாகத்தான் அமித் ஷாவின் கருத்து இருக்கிறது. இந்தித் திணிப்பு மூலம் மீண்டும் நாட்டின் ஒற்றுமையை சிதைப்பதற்கான வேலையை உள்துறை அமைச்சம் செய்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. தேர்தல் பிரசாரத்தின்போது வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரியின் நிதி நெருக்கடி சரி செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் ஆகிறது. மாநிலத்தின் நிதிப் பிரச்னையை தீர்க்க மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. கூடுதலாக நிதி கொடுக்கவில்லை. கடனை தள்ளுபடி செய்யவில்லை. மத்திய நிதி குழுவில் சேர்க்கவில்லை. புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடையாது என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது புதிதாக வந்திருக்கும் மற்றுமொரு பிரச்னை கல்லூரிகளில் சேர்வதற்கான கியூட் நுழைவுத் தேர்வு. அந்த தேர்வை அமல்படுத்தினால் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இப்படி ஒட்டுமொத்தமாக புதுச்சேரி வஞ்சிக்கப்பட்டுள்ளது. தட்டாஞ்சாவடியில் மார்க்கெட் கமிட்டி இருக்கும் இடத்தில் சட்டப்பேரவை கட்டப்போகிறோம் என்று சொன்னார்கள். அந்த அறிவிப்பு அதன்பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. இதற்கிடையில் தட்டாஞ்சாவடியில் இருக்கும் மார்க்கெட் கமிட்டியை ஈ.சி.ஆரில் உள்ள இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சட்டப்பேரவை செயலகம் குறிப்பாணை அனுப்பியிருக்கிறது. மார்க்கெட் கமிட்டியை மாற்ற வேண்டும் என்று சட்டப்பேரவை செயலகம் குறிப்பிட்டிருக்கும் அந்த இடத்தில்தான், 24-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டவிருக்கிறார்.

இப்படி இவர்களின் திட்டங்களிலேயே நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. புதுச்சேரி பாரதிதாசன் பிறந்த தமிழ் மண். இந்த மண்ணில் இந்தியைத் திணிக்க முயலும் அமித் ஷாவின் வருகையை எதிர்ப்பதுதான் ஒரு ஜனநாயகக் கடமையாக இருக்கும். எனவே ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவே திரும்பி போ என்று கூறுகிற வகையிலும், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற வகையிலும் 24-ம் தேதி கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதற்கு முன்பு 22 , 23-ம் தேதிகளில் அனைத்து கட்சிகள் சார்பில் அதற்கான பிரசாரம் நடைபெறும். தற்போது காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ளனர். அவர்கள் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பதுடன் பங்கேற்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர். அதேபோல் தி.மு.க-வினரும் அவர்கள் கட்சித் தலைமையிடம் பங்கேற்க அனுமதி கேட்டுள்ளனர். அவர்களும் கண்டிப்பாக பங்கேற்பார்கள்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism