Published:Updated:

புதுச்சேரி: ``பாஜக-வுக்குச் சென்றவர்கள் எங்களிடம் ரகசியமாகப் பேசி வருகிறார்கள்!” – காங்கிரஸ்

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்

`` புதுவையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பா.ஜ.க-வுக்கு சென்றவர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்கள் எங்களை ரகசியமாக தொடர்புகொள்கின்றனர்.” – புதுச்சேரி காங்கிரஸ்

புதுச்சேரி: ``பாஜக-வுக்குச் சென்றவர்கள் எங்களிடம் ரகசியமாகப் பேசி வருகிறார்கள்!” – காங்கிரஸ்

`` புதுவையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பா.ஜ.க-வுக்கு சென்றவர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்கள் எங்களை ரகசியமாக தொடர்புகொள்கின்றனர்.” – புதுச்சேரி காங்கிரஸ்

Published:Updated:
புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் இன்று தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புதுவை மாணவர்களுக்கு அந்த சந்தேகம் உள்ளது. புதுவையில் உள்ள தனியார் கல்லூரிகளில், மொத்தம் 450 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அதில் கடந்த ஆண்டு 170 இடங்கள்தான் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டது. மத்திய பா.ஜ.க அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 50 சதவிகித இடங்களை அரசு இடங்களாக பெற சட்டம் இயற்றியுள்ளது. அதன்படி புதுவையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 225 இடங்களை அரசு பெற்றிருக்க வேண்டும். நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் 50 சதவிகித இடங்களை பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசு
மத்திய அரசு

மாநில அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தையே, அரசு ஒதுக்கீடு இடங்களை பெறும் மாணவர்களிடமும் தனியார் கல்லூரிகள் வசூலிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதை எதிர்த்து தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். புதுவை அரசு உச்ச நீதிமன்றம் சென்று அந்த நீதிமன்ற தடையை நீக்க வேண்டும். மத்திய பா.ஜ.க அரசின் சட்டத்தை, விதிமுறைகளை புதுவையில் அமல்படுத்த பா.ஜ.க-வினர் வலியுறுத்த வேண்டும். பொருளாதாரத்தில் இந்திய நாடு இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி, 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக பா.ஜ.க-வினர் சொல்கின்றனர். இங்கிலாந்தில் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 50,000 டாலர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதாவது இந்திய மதிப்பில் ரூ.40 லட்சம். இந்தியாவில் தனிநபரின் வருமானம் 2,200 டாலர். அதாவது வெறும் 2 லட்சம் ரூபாய். இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அரிதாகி ஏழ்மை அதிகரித்து வருகிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர். நாட்டின் வருமானமான 57 சதவிகிதத்தில் 10 சதவிகிதம் வசதி படைத்தவர்களே பெற்று வருகின்றனர். ஆனால் மத்திய பா.ஜ.க அரசு ஒரு மாயத்தோற்றத்தை மக்களிடம் உருவாக்குகிறது. அது கண்டிப்பாக உடையும். காங்கிரஸ் உட்கட்சித் தேர்தலுக்கு அடிப்படையில் இருந்து தயாராகி வருகிறது. பா.ஜ.க-வின் தூண்டுதலால் கட்சிக்குள் சிலர் விஷமம் பண்ணுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. கட்சியிலிருந்து வெளியேறிய குலாம்நபி ஆசாத்தை இளைஞர் காங்கிரஸ் தலைவராக, கட்சியின் பொதுச்செயலாளராக அடையாளம் காட்டியது காங்கிரஸ்தான்.

அவரின் சொந்த மாநிலமான காஷ்மீரில் அரசியல் செய்தது இல்லை. இப்போதுதான் காஷ்மீரில் அரசியல் செய்கிறார். அதுவும் காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவே தொடரும் எனக் கூறுகிறார். ஆனால் அங்குள்ள மக்கள் மாநில அந்தஸ்து கோரி வருகின்றனர். கட்சி இக்கட்டான சூழலில் இருக்கும்போது, கட்சிக்காக அவர் போராடியிருக்க வேண்டும். ஆனால் அவர் தப்பிச்சென்றுள்ளனர். புதுவையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பா.ஜ.க-வுக்கு சென்றவர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்கள் எங்களை ரகசியமாக தொடர்புகொள்கின்றனர். நாங்கள் வெளிப்படையாக வாருங்கள் என அவர்களை அழைத்து வருகிறோம்” என்றார்.