Published:Updated:

புதுச்சேரி: தோல்வியடைந்த ஏனாம்; வெற்றிபெற்ற தட்டாஞ்சாவடி! -முதல்வரின் தேர்தல் செலவு எவ்வளவு?

 முதல்வர் ரங்கசாமி
முதல்வர் ரங்கசாமி

சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் ஒருவருக்கு அதிகபட்சமாக 22 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய அனுமதி அளித்திருந்த புதுச்சேரி தேர்தல்துறை, தற்போது அவர்களின் செலவினப் பட்டியலை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

2021 புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸும் பா.ஜ.க-வும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. அதேபோல எதிரணியில் தி.மு.க-வும் காங்கிரஸும் கைகோத்துக் களம்கண்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் இந்தத் தேர்தலில் சுயேச்சைகள் உட்பட 324 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்கள் அனைவரும் தங்களது தேர்தல் செலவுக் கணக்குகளை தாக்கல் செய்யுமாறு மாநில தேர்தல்துறை அறிவுறுத்தியது. அதையடுத்து தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் மட்டுமன்றி, களத்தில் நின்ற அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் செலவினங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தாக்கல் செய்தனர். அதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், மாஹே வேட்பாளரான ஜானகி மற்றும் மண்ணாடிப்பட்டு வேட்பாளரான தனவேலு ஆகியோரைத் தவிர மற்றவர்களின் தேர்தல் செலவினப் பட்டியலை ஏற்றுக்கொண்ட மாநில தேர்தல் துறை, அவற்றைத் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறது.

புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை

இதில் அதிகபட்சமாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி போட்டியிட்டு தோல்வியடைந்த ஏனாம் தொகுதியில் ரூ.19,19,354 செலவு செய்திருக்கிறார். அதேசமயம் அவர் வெற்றிபெற்ற தொகுதியான தட்டாஞ்சாவடியில் வெறும் ரூ.6,50,742 மட்டுமே செலவு செய்திருக்கிறார். ஏனாம் தொகுதியில் முதல்வர் ரங்கசாமியைத் தோற்கடித்த சுயேச்சை வேட்பாளரான ஸ்ரீநிவாஸ் அசோக் ரூ.13,80,615 செலவிட்டிருக்கிறார். அதேபோல குறைந்தபட்சமாக ரெட்டியார்பாளையம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற சிவசங்கரன் ரூ.2,17,632, முத்தியால்பேட்டை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர் பிரகாஷ்குமார் ரூ. 2,46,716 செலவு செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தொகுதிவாரியாக வெற்றிபெற்ற எம்.எல்.ஏ-க்களின் செலவு விவரம்:

1. மண்ணாடிப்பட்டு - நமச்சிவாயம் ரூ.6,16,293.

2. திருபுவனை (தனி) - அங்காளன் ரூ.4,25,138.

3. ஊசுடு (தனி) - சாய்.ஜெ.சரவணன்குமார் ரூ.6,78,96.

4.மங்கலம் - தேனீ ஜெயக்குமார் ரூ.5,08,126.

5.வில்லியனூர் - சிவா ரூ.9,09,916.

6.உழவர்கரை - சிவசங்கரன் ரூ.2,17,632.

7.கதிர்காமம் - கே.எஸ்.பி.ரமேஷ் ரூ.3,82,491.

8.தட்டாஞ்சாவடி - ரங்கசாமி ரூ.6,50,742.

9.இந்திராநகர் - ஏ.கே.டி.ஆறுமுகம் ரூ.3,82,656.

10.காமராஜர் நகர் - ஜான்குமார் ரூ.8,91,899.

11.லாஸ்பேட்டை - வைத்தியநாதன் ரூ.6,08,151.

12.காலாப்பட்டு - கல்யாணசுந்தரம் ரூ.14,49,833.

13.முத்தியால்பேட்டை - பிரகாஷ்குமார் ரூ.2,46,716.

14. ராஜ்பவன் - லட்சுமிநாராயணன் ரூ.6,45,598.

15.உப்பளம் - அனிபால்கென்னடி ரூ.2,58,182.

புதுச்சேரி: `வேட்பாளர்கள் செலவுத் தொகை எவ்வளவு?!’-சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர்

16.உருளையன்பேட்டை - நேரு ரூ.8,36,084.

17.நெல்லித்தோப்பு - ரிச்சர்ட் ஜான்குமார் ரூ.5,70,270.

18.முதலியார்பேட்டை - சம்பத் ரூ.6,53,792.

19.அரியாங்குப்பம் - பாஸ்கர் ரூ.5,42,704.

20.மணவெளி - செல்வம் ரூ.12,94,117.

21.ஏம்பலம் (தனி) - லட்சுமிகாந்தன் ரூ.3,67,860.

22.நெட்டப்பாக்கம் - ராஜவேலு ரூ.4,46,881.

23.பாகூர் - செந்தில்குமார் ரூ.6,14,564.

24.நெடுங்காடு (தனி) - சந்திரபிரியங்கா ரூ.7,27,520.

25.திருநள்ளாறு - பி.ஆர்.சிவா ரூ.8,62,204.

26.காரைக்கால் வடக்கு - திருமுருகன் ரூ.15,47,783.

27.காரைக்கால் தெற்கு -நாஜிம் ரூ.8,33,298.

28.நிரவி - நாக.தியாகராஜன் ரூ.9,28,892.

29.மாகே - ரமேஷ் பரம்பத் ரூ.12,97,585.

30. ஏனாம் - ஸ்ரீநிவாஸ் அசோக் ரூ.13,80,615.

அடுத்த கட்டுரைக்கு